தக்காளியை அதிகமாகச் சாப்பிட்டால் இதெல்லாம் ஏற்படும்- எச்சரிக்கை ரிப்போர்ட்!

தக்காளி சாம்பார், தக்காளி ரசம், தக்காளி சாலட், தக்காளித் தொக்கு இப்படிப் பலவகை உணவுகளைத் தயாரித்துச் சாப்பிடுவது சைவப் பிரியர்களுக்கு அலாதி இன்பத்தைக் கொடுக்கும் என்றார்.

தன்னிகரில்லா உணவு (Spontaneous food)
அதுமட்டுமா தக்காளி ஜாம், தக்காளி பிரியாணி உள்ளிட்டவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக் கவரும் தன்னிகரில்லா உணவு மற்றும்.

சத்துக்கள் நிறைந்தது (Full of nutrients)
இந்தத் தக்காளியில் வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே, லைகோபீன் மற்றும் ஆண்டியாக்சிடெண்டுகள் நிறைந்திருப்பதால், இவை பல வழிகளில் நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

விளைவுகளும் உண்டு (There are consequences as well)
ஆனால் அளவுக்கு அதிகமாகத் தக்காளியை உணவில் சேர்த்துக்கொண்டால் பின்வரும் விளைவுகள் விபரீதத்தை ஏற்படுத்தலாம் என்றார்.

ஆரோக்கியத்திற்கு ஆப்பு (Wedge to health)
தக்காளி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு புற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. ஆனால் தக்காளி புளிப்பு என்பதால், அதிகமான தக்காளியைச் சாப்பிடுவதும் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

சிறுநீரகக் கல் அபாயம் (Risk of kidney stones)
தக்காளியில் அதிக ஆக்சலேட் மற்றும் கால்சியம் இருக்கின்றன. இவை உடலில் ஒன்றாகக் குவியும் தன்மை கொண்டவை. இதன் காரணமாக சிறுநீரகத்தில் கல் உருவாகும் அபாயம் உள்ளது. எனவே தக்காளியைக் குறைந்த அளவில் சாப்பிடுவது நல்லது.

மூட்டு வலிக்கு வித்திடும் (Sowing joint pain)
தக்காளி மூட்டு வலி மற்றும் வீக்கத்தின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. தக்காளியில் உள்ள ஒரு கலவையால், திசுக்களில் கால்சியம் குவியத் தொடங்குகிறது. வீக்கம் காரணமாக, மூட்டு வலி பிரச்சினை ஏற்படுகிறது.

ஒவ்வாமை அபாயம் (Risk of allergies)
தக்காளியில் உள்ள ஹிஸ்டமைன் எனப்படும் ஒரு கலவை ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடிய அபாயம் உள்ளது.

தோல் அழற்சி (Dermatitis)
சிலருக்கு அதிகமாக தக்காளியை சாப்பிடுவதால், இருமல், தும்மல், அரிக்கும் தோலழற்சி, தோல் வெடிப்பு, தொண்டை அரிப்பு, முகத்தில் வீக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மார்பு எரிச்சல் (Chest irritation)
தக்காளி மாலிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் இரண்டையும் கொண்டுள்ளது. எனவே அதிகமாகத் தக்காளி சாப்பிடுவது மார்பு எரிச்சல் அல்லது அமில ரிஃப்ளக்ஸை ஏற்படுத்தும்.
சால்மோனெல்லா பாக்டீரியாவைக் கொண்டிருக்கும் பல தக்காளி வகைகளும் உள்ளன. இவை வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக்கூடிய அபாயம் உள்ளது.

ஆகையால் அத்தகையவர்கள் தக்காளியை அளவோடு உட்கொள்வது நல்லது. தகத் தகத் தக்காளிபோல அழகாகவும், ஆரோக்கியத்துடனும் வாழ்வோம் என்றார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories