தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மையை முழுமையாக முன்னெடுப்பதற்கு உறுதி எடுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
“பண்ணை ஆராய்ச்சி மற்றும் உலக உணவு பாதுகாப்புக்கான நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவம்” (வானகம்)- அரசுக்கு வழங்கும் பரிந்துரைகள்.
வேளாண்மை இடத்துக்கிடமும், நபருக்கு நபரும் மாறுபடும்.
“பாம்பு தின்னும் ஊருக்குப் போனால் நடுத்துண்டம் எனக்கு” என்கிற சொல்லாடலை கருத்தில் கொண்டு பொது வினியோக திட்டத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் .
1.வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு இயற்கை வேளாண்மை உணவளிக்கும் என்பதற்கான சாட்சிகளாக குறைந்தது தமிழ்நாட்டில் 100 பண்ணைகளை அடையாளம் காட்ட முடியும்.
2.இடுபொருட்களை பண்ணைப் பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யும் முறையை ஊக்குவிக்க வேண்டும். பயிற்சி அளிக்க வேண்டும்.
3.வேளாண் இடுபொருட்கள் தயாரிக்கும் பயிற்சியை மகளிர் குழுக்களுக்கு வழங்கி அவர்களது வருவாயை பெருக்குவதோடும், பண்ணைகளுக்கு விற்பனை செய்யவும் வேண்டும்.
4.உழவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும், விரிவாக்கப் பணியாளார்களுக்கும் முன்னோடி இயற்கை விவசாயிகள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இயற்கை விவசாய பண்ணைகளை பயிற்சி மையங்களாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
5.பலபயிர் சகுபடி, பயிர் சுழற்சி, பல்லுயிர் பெருக்கம், பகுதிக்கேற்ற பயிர்கள் தேர்வு. முறைகளை கையாள வேண்டும்.
6.பாரம்பரிய விதைகளை விவசாயிகள் உற்பத்தி செய்யவும், பரிமாற்றம் செய்வதையும் சட்ட உரிமையாக்க வேண்டும். அதற்கான வழிகாட்டலும், பயிற்சியும் அளிக்க வேண்டும்.
7.காந்தி சொன்னது போல, நமக்கு அதிக உற்பத்தியை விட அதிகம் பேர் பங்கேற்கும் உற்பத்தி முறையை கவனத்தில் கொள்ள வேண்டும். அதுவே கிராமங்களை வாழ வைக்கும். அதிக உற்பத்தியை கொடுக்கும். பலருக்கும் வேலை வாய்ப்பை வழங்கும்.
8.சிறிய பண்ணை கருவிகளுக்கான ஆராய்ச்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அரசின் வேளாண் பொறியியல் துறையை இப்பணியில் துரித படுத்த வேண்டும்.
8.TNAU ஆய்வுகள் விவசாயிகள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகவும், வேளாண் மக்களின் நலனில் அக்கறை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
10.சுனாமியால் பாதிக்கப்பட்ட நிலங்களை நம்மாழ்வார் 6 மாதத்தில் மீட்டது உலகிற்கு முன்மாதிரியானது. புதிதாக இயற்கை வேளாண்மைக்கு ஒரு நிலம் மாற 6 மாத காலம் போதுமானது.
11.உள்ளூர் கால்நடைகள் பெருக்கம் மிக முக்கியமானது. ஒவ்வொரு நாட்டு ரக கால்நடைகளுக்கும் தனித்தனியாக ஆராய்ச்சி மற்றும் பெருக்கம் செய்ய வேண்டும்.
உழவர்களுக்கு, கால்நடைப் பெருக்கத்திற்காக வட்டியில்லா கடனுதவி வழங்க வேண்டும்.
12.வேளான் விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்கும் பழக்கத்தை ஏற்படுத்த போதுமான பயிற்சியும், கருவிகளும் வழங்கி கூட்டுறவையும் ஏற்படுத்த வேண்டும்.
13.நிலத்தடி நீரை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். குடிமராமத்து, ஏரி குளங்கள் தூர்வாருதல், சிறிய அள்விலான தடுப்பனைகளை உருவாக்க வேண்டும். உபரிநீர் கடலுக்கு செல்லுவதை உறுதி படுத்த வேண்டும்.
14.உழவர் சந்தைகளும், வார சந்தைகளும் ஊக்குவிக்கப்பட வேண்டும். இங்கே இயற்கை வேளான் விளைபொருட்களை விற்பனை செய்ய தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும்.
15.இயற்கை வேளாண்மைக்கு சான்றளிப்பு செய்யும் பணிகளை உள்ளாட்சி அமைப்புகளிடம் கொடுத்து அதனை எளிமை படுத்த வேண்டும். அரசு இயந்திரமான கிராம நிர்வாக அலுவலரையும் ஈடுபடுத்த வேண்டும். அவர்களுக்கு தேவையான பயிற்சியையும் கொடுக்க வேண்டும்.
16.நம்மாழ்வார் ஒன்றியத்திற்கு ஒரு மாதிரி பண்ணை வேண்டும் என்று சொல்லி வந்தார். அரசே செய்வதால், பஞ்சாயத்துக்கு ஒரு மாதிரி பண்ணையை உருவாக்க வேண்டும்.
17.இயற்கை வேளாண்மையில் உயர் விளைச்சல் எடுக்கும் உழவர்களுக்கும், அலுவலர்களுக்கும் பரிசு, பாராட்டு வழங்க வேண்டும்.
18. தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்து வேளாண் பொருட்களையும் இங்கேயே உற்பத்தி செய்ய திட்டம் வகுத்து செயல்பட வேண்டும். அண்டை மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்வது கூட தவிர்க்கப்பட வேண்டும் என்று நம்மாழ்வார் சொல்லி வந்தார்.
19.தன்னார்வலர்களையும், சமூகப்பணி நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து இயற்கை வேளாண்மையை முன்னெடுக்கும் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
20.வேளாண்மை என்பது ஒரு வாழ்வியல் நடைமுறை என்பதை அரசு புரிந்து கொண்டு, உழவர்களுக்கான திட்டங்களை வகுக்க வேண்டும். இது இளைஞர்களை வேளாண்மையில் ஈடுபட ஊக்குவிக்கும்.
21.மாதிரி இயற்கை வேளாண்மை கிராமங்களை உருவாக்க வேண்டும்.
22.மாநில அளவில் இயற்கை வேளாண்மைக்கான தனி நிர்வாக அமைப்பை உருவாக்க வேண்டும்.
23.ரசாயன உர மானியத்தை கம்பெனிகளுக்கு வழங்குதற்கு மாற்றாக இயற்கை உழவர்களுக்கு நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.
24.செம்மை நெல் சாகுபடி முறையை ஊக்குவிக்க வேண்டும் .
25.அரசே இயற்கை வேளாண்மைக்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையங்களை உருவாக்க வேண்டும்.
ஏற்கனவே இயங்கி வரும் ஒருங்கிணைந்த பயிற்சி மையங்களை ஊக்குவிக்க வேண்டும்.
26.வட்டார அளவிலான மரபு விதை வங்கியை உருவாக்க வேண்டும்.
27.நீர்நிலைகளை சுற்றியுள்ள பகுதிகளில் மரங்களை வளர்த்து பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்க வேண்டும்.
28.ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைக்கான பயிற்சிகளை வயல்வெளிப் பள்ளிகளாக விரிவாக செய்ய வேண்டும்.
29.வானவாரி பகுதிகளில் சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அரசு திட்டங்களை உருவாக்க வேண்டும்.
30. வேளாண் நிலங்களில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் மழைநீரை அறுவடை செய்யவும் வாய்ப்புள்ள இடங்களில் மீன் வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும்.
இப்படிக்கு
ஆ.ரமேஷ்
பொருளாளர்
பேச:9626092408.