தயிருடன் இவற்றைச் சேர்க்கவே கூடாது- சேர்த்தால் விளைவுகள் விபரீதம் ஆகும்!

தயிர் என்பது நம்மில் பலருக்கு விருப்பமான ஒன்று. அதுவும் கோடை காலத்தில் தயிர்சாதமே நமக்கு தேவாமிர்தமாக இருக்கும்.

ஆனால் இந்தத் தயிருடன் சில உணவுகளைச் சேர்ந்தது சாப்பிட்டால், பல்வேறு பக்கவிளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். ஏனெனில் தயிர், இயற்கையிலேயே, அதிக சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருள். தயிர் இயற்கையான உணவு என்றாலும், இதனுடன் இந்த குறிப்பிட்ட உணவு வகைகளை சேர்த்து சாப்பிடக்கூடாது என்றார்.

எண்ணற்ற சத்துக்கள் (Countless nutrients)
பால் கிரீம் நிரம்பியத் தயிரில், அரிந்த பழங்களைத் தூவி சாப்பிடுவது என்பதே அளப்பரிய ஆனந்தத்தை தரும். தயிரில், கால்சியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி 12, மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்டவைகள் மிக அதிகளவில் உள்ளன. தயிர் எளிதில் செரிமானம் அடையக் கூடிய உணவுப்பொருள் ஆகும் மற்றும்

இத்தனை நற்குணங்கள் அடங்கியத் தயரில் சில உணவுப்பொருட்களைச் சேர்த்தால், அது உடலுக்குக் கேடு விளைவிக்கும் பொருளாக மாறிவிடுகிறது என்றார்.

வெங்காயம் (Onion)
உங்களுக்கு தயிர் வெங்காயம் அல்லது ரைத்தா மிகவும் பிடிக்கும் என்றால், நீங்கள் உங்கள் உணவுப் பழக்கத்தை முதலில் மாற்றிக்கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில், தயிர் என்பது இயற்கையிலேயே, நமது உடலுக்கு குளிர்ச்சித் தன்மையை அளிக்கவல்லது. வெங்காயம், நமது உடலுக்கு வெப்பத்தை அளிக்கவல்லது. தயிர் வெங்காயம் போன்ற தயிரும் வெங்காயம் கலந்த கலவையை நாம் அதிகம் விரும்பி சாப்பிடும் பட்சத்தில், அது, தோல் அலர்ஜியை ஏற்படுத்தவல்ல உடல் அரிப்பு, எக்ஸிமா, சோரியாசிஸ் போன்ற குறைபாடுகளை நமது உடலில் ஏற்படுத்தி விடும்.

மாம்பழம் (Mango)
ஒரு கோப்பைத் தயிர் உடன்,மாம்பழங்களைத்துண்டுகளைச் சேர்ந்து சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்கும் . வெங்காயத்தை போன்றே, மாம்பழமும், நமது உடலில் வெப்பத்தை அதிகரிக்கவல்லது ஆகும். தயிர் உடன் மாம்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தோல் சம்பந்தமான நோய்கள், உடலின் செயல்பாடுகள் தடைபடுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் இதில்

மீன்(Fish)
தயிர் என்பது புரோட்டீன் அதிகம் உள்ள உணவுப்பொருள். இது மாடுகளில் இருந்து பெறப்படுவதால், இது விலங்கு புரத வகையை சேர்ந்தது ஆகும். அதேபோல், மீனில் அதிகளவில் புரதம் உள்ளது. இதுவும் விலங்கு வகை புரதம் ஆகும். எப்போதும் ஒரு விலங்கு வகை புரதத்துடன் இன்னொரு விலங்கு வகை புரதத்தையோ அல்லது தாவர வகை புரதத்துடன், இன்னொரு தாவர வகை புரதத்தையோச் சேர்த்து சாப்பிடக் கூடாது. இது நமது உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். தயிர் உடன் மீன் சேர்த்து சாப்பிட்டால், அஜீரணக் கோளாறு ஏற்படுவதுடன், வயிறு தொடர்பான உபாதைகளும் ஏற்படக் கூடும்.

பால் (Milk)
பால் மற்றும் தயிர் மாடுகளில் இருந்தே பெறப்படுவதால், இவை இரண்டும் விலங்கு வகை புரதத்தை தன்னகத்தேக் கொண்டுள்ளது. பால் மற்றும் தயிரை சேர்த்து சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு, உப்பிசம் மற்றும் வாய்வுக் கோளாறுகள் உள்ளிட்டவை ஏற்படக் காரணமாக அமைந்து விடும் எனவே,

உளுந்தம்பருப்பு
தயிர் உடன் உளுந்தம் பருப்பினால் செய்த உணவுகளைச் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அது செரிமானத்தில் பிரச்சினையை உருவாக்கி இறுதியில், வயிற்று உப்பிசம், வாய்வுக் கோளாறு, வீக்கம், வயிற்றுப்போக்கு அல்லது பேதி போன்ற மோசமான நிலைக்குக் கொண்டு சென்றுவிடும்.

எண்ணெய் நிறைந்த உணவுகள் (Oily foods)
நெய் தடவப்பட்ட புரோட்டா, சால்னா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அந்தளவுக்கு அதன் சுவை நம்மை எல்லாரையும் கட்டிப்போட்டு வைத்துள்ளது. எண்ணெய் மிக்க உணவுகள் உடன் புரதம் நிறைந்த தயிர் சேர்த்துச் சாப்பிடும் போது, அது செரிமானத்தைத் தாமதப்படுத்துவது மட்டுமல்லாது, நம்மை விரைவில் சோர்வுடையச் செய்துவிடுகிறது.
இதன் காரணமாகவே, எண்ணெய் நிறைந்த உணவுப்பொருட்களைச் சாப்பிட்ட பிறகு, லஸ்ஸி போன்ற பானங்களை குடிக்கும்போது, வெகுவிரைவில் உறக்கம் நம்மைத் தழுவிக்கொள்கிறது என்று கூறினார்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories