தரமான பால் எது? என்பதை அறிந்துகொள்ளுங்கள்!

பாக்கெட் பால் தொடங்கி பல மாதங்கள் கெட்டுப்போகாத பால் வரை, மார்க்கெட்டில் எத்தனையோ பால் பாக்கெட்டுகள் கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் விற்பனை செய்யப்படுகின்றன. இருந்தாலும், பசும்பாலின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை இன்னும் பல யுகங்களுக்குத் தொடரும்.

அப்படியானால், பாலின் தரத்தை நிர்ணயிக்கும் காரணிகள் எவை என்பதைத் தொரிந்துகொள்ள வேண்டும்.

காரணிகள் (Factors for Quality)
அதாவது,பசும்பாலில் 3.5 சதவீத கொழுப்புப்பொருளும் 8.5 சதவீதம் கொழுப்பு அல்லாத திடப்பொருட்களும் கட்டாயம் இருக்க வேண்டும். அதேபோல், எருமைப்பாலில் 5 சதவீத கொழுப்புப்பொருளும் 9 சதவீத கொழுப்பு அல்லாத திடப்பொருட்களும் இருக்க வேண்டும். இந்த அளவீட்டில் இருந்தால் தான் அது தரமான பால்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை
பாலில் கொழுப்புச்சத்து அதிகரிக்க வேண்டுமெனில் பசுக்களுக்கான தீவன விகிதத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

பசும்புல் வகை தீவனங்களில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், நன்றாக முற்றிய சீமைப்புல் ரகங்களை சிறு சிறு துண்டுகளாக்கி கறவை மாடுகளுக்கு கொடுக்க வேண்டும்.

இவற்றை உண்ணும் போது வயிற்றின் அறையில் உராய்வை ஏற்படுத்துகின்றன. இதன் மூலம் அசிட்டோ அசிட்டிக் அமிலம், அசிட்டிக் அமிலம் மற்றும் பியூட்ரிக் அமிலங்கள் சுரக்கின்றன.

இந்த அமிலச்சத்துகள் ரத்தத்தில் சேர்ந்து கொழுப்பு அமிலங்களாக உருவாகி விடுகின்றன.

புண்ணாக்கு, கலப்பு தீவனங்களால் கொழுப்புச்சத்து அதிகரிக்க வாய்ப்பு இல்லை.

அடர் தீவனங்கள் மூலம் பால் உற்பத்தி அதிகரிக்கும். அதேநேரத்தில், கம்பு, சோளம், மக்காச்சோளத்தை பெருந்துகள்களாக அரைத்து கொடுத்தால் பாலில் கொழுப்புச்சத்து அதிகரிக்கும்.

குளிர்காலத்தில் பாலில் கொழுப்புச்சத்து அதிகமாகவும் கோடை காலத்தில் குறைவாகவும் இருக்கும்.

நாட்டு இன மாடுகளில் தான் கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும் என்றார்.

கன்று பிறந்த ஒரு வாரத்தில் கொழுப்புச்சத்து அதிகமாகவும், அதன்பிறகு இரண்டு மாதங்கள் வரை குறைவான சத்தும் இருக்கும். பின்னரே அடர்த்தி அதிகரிக்கும்.

ஐந்தாவது கன்று ஈன்ற பின் கறவை மாடுகளின் பாலில் கொழுப்புச்சத்து குறைந்து கொண்டே வரும்.

கோடையில் வெப்பத் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள உடம்பில் நீர் தெளித்து கொண்டிருந்தால் கொழுப்புச்சத்து குறையாது என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories