தினமும் ஓமம் டீ- வாயுத்தொல்லைக்கு நீக்க முடியும்

 

செரிமானம் பிரச்சினை, எடை குறைப்பு, வாயு பிரச்சினை உட்பட பலப்பிரச்னைகளுக்குத் தீர்வு அளிக்கிறது இந்த டீ. இதனை நம் சமையலறையில் எப்போதுமே வைத்திருப்போம். ஆனால் ஒருநாளும் தேநீராக்கிக் குடித்ததில்லையே என்றக் கேள்விகள் உங்களுக்குள் எழும். ஏனெனில், சொல்லவருவது ஓமம் தேநீர் பற்றி.

பல பாரம்பரிய இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும் பொதுவான மசாலா ஒமம் ஆகும். இந்தத மூலிகை தேநீர் மற்றும் பக்கோடா, பரோட்டா போன்ற உணவுகளிலும் சேர்க்கப்படுகிறது. இது ஆயுர்வேத மசாஜ்களிலும் பயன்படுத்தப்படும் பொதுவான மூலப்பொருள்தான் ஓமம். ஓமம் குறிப்பாக ராஜாஸ்தானில் அதிகளவில் விளையக்கூடியது. இது, ஒரு விதை வடிவில் உலர்த்தப்பட்ட தாவரத்தின் பழமாகும் என்றார்

வாயுப் பிரச்சினை
வாயுத்தொல்லை என்பது பொதுவாக சில உணவுகளால் உணவுக்குழாயில் வாயு சேர்வதாகும். இவற்றை ஓமம் தண்ணீரை குடிப்பதன் மூலமும், உணவில் அதனை சேர்ப்பது மூலமும் தீவிரத்தை குறைக்க முடியும்.

செரிமானம் பிரச்சினை
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஓமம் தண்ணீரை குடித்து வந்தால், செரிமான பிரச்சினையை குறைக்கலாம். இரண்டு டீஸ்பூன் வறுத்த ஓமம் விதைகளை, ஒரு கப் நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். அதனை தண்ணீர் கொதிக்க வைத்து, பின்னர் ஆறவிட்டு குடிக்க வேண்டும். அதிகமாக சாப்பிட்ட பிறகு, இந்த பானத்தை பருகுவது நல்ல சாய்ஸ் ஆகும்.

எடை குறைப்பு
சிறந்த செரிமானமே தேவையற்ற எடை அதிகரிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது. தினமும் ஒரு டம்ளர் ஓமம் தண்ணீரை பருகுவது சிறந்த பலனை தரும்

வீக்கம்
கர்ப்பிணிப் பெண்களுக்கு மலச்சிக்கல் மற்றும் வீக்கம் பொதுவான பிரச்னை ஆகும். இதனை தடுத்திட, ஒரு கிளாஸ் ஓமம் தண்ணீரை கொதிக்க வைத்து பருகினால், அற்புதங்களை உடலில் காணலாம்.

இருமல் / சளிக்குத் தீர்வு
சில துளசி இலைகள் மற்றும் ஒரு டீஸ்பூன் ஓமம் விதைகளை நீரில் கொதிக்கவைத்து சாப்பிடுவது சளி மற்றும் இருமல் பிரச்சினை கணிசமாகக் குறைக்கும். இது இந்திய குடும்பங்களின் பொதுவான வீட்டு வைத்தியமாகும். விரைவில் நல்ல பலனை எதிர்ப்பார்க்கலாம் என்றார்

அமிலத்தன்மை
ஒழுங்கற்ற உணவுப் பழக்கம் மற்றும் ஸ்நாக்ஸ் உட்கொள்வது அமிலத்தன்மையை அதிகரிக்கும். இதனை கட்டுப்படுத்த, ஓமத்தை உங்கள் சாப்பாட்டில் சேர்த்து உட்கொள்ளலாம். அல்லது ஓமம் தண்ணீரை சாப்பாட்டிற்கு பிறகு பருகலாம் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories