தேசிய நெல் திருவிழா – 2021

தேசிய நெல் திருவிழா – 2021
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து பரவலாக்கும் முயற்சியாக மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களால் 2006- ல் தொடக்கி வைக்கப்பட்டு, மறைந்த பாரம்பரிய நெல் மீட்பாளர் ஐயா நெல்ஜெயராமன் அவர்களால் நடத்தப்பட்டு வந்த தேசிய அளவிலான நெல் திருவிழா, இவ்வாண்டும் தமிழக அரசின் வழிகாட்டுதலோடு, சமூக இடைவெளியுடன் ஆதிரெங்கம் நெல்ஜெயராமன் பாரம்பரியநெல் பாதுகாப்பு மைய முன்னோடி உழவர்களின் தலைமையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஏ.ஆர்.வி. திருமண அரங்கத்தில் 2021, ஆகஸ்ட் 5 -ம் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

 தேசிய நெல் திருவிழாவின் முதல் நிகழ்வாக காலை 8 .30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் பாரம்பரிய கோட்டையை வைத்து காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் உருவப்படங்களுடன் மங்கள இசையுடன் உழவர்களின் பேரணி திருத்துறைப்பூண்டி உழவர் சந்தையிலிருந்து விழா மண்டபத்தை வந்தடையும்.

 வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், மற்றும் நெல்ஜெயராமன் உருவப்படங்கள் திறக்கப்பட்டு அவர்களுக்கு உழவர்களின் அஞ்சலி நடைபெறும்.

 பாரம்பரிய நெல் மீட்பாளர் ஐயா நெல்ஜெயராமன் அவர்களால் மீட்டெடுக்கப்பட்ட 174 பாரம்பரிய நெல் ரகங்களின் கண்காட்சி நடைபெறும்.

 தேசிய அளவிலான நெல் திருவிழாவில் கலந்து கொள்ளும் உழவர்களுக்கு தலா 2 கிலோ பாரம்பரிய விதை நெல் இலவசமாக வழங்கப்படும்.

 பாரம்பரியநெல் இயற்கை வேளாண்மையில் சாதனை செய்த உழவர்களை பாராட்டும் விதமாக ஐயா நம்மாழ்வார் பெயரில் விருது மற்றும் ஐயா நெல் ஜெயராமன் பெயரில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும்.

 முன்னோடி இயற்கை உழவர்களுக்கு ஒன்றிய அரசின் இயற்கை தர சான்றிதழ் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தின் மூலம் வழங்கப்படும்..

 சிறப்பு கருத்தரங்கம்,

o இயற்கை வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் ,
o மண் வளமும் மேம்பாடும்,
o பாரம்பரிய நெல்லும் பருவநிலை மாற்றமும்
o பாரம்பரிய அரிசிகள் காலத்தின் கட்டாயம்
o பாரம்பரிய கால்நடைகளின் முக்கியத்துவம்,
o பி.ஜி.எஸ். இயற்கை தர சான்றிதழ் பெறுவதில் அவசியம்.

 சிறப்பு அழைப்பாளர்கள்

• தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களும்,
• தமிழக அரசின் சுற்றுசூழல் காலநிலை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டுதுறை அமைச்சர் மாண்புமிகு சிவ.வி. மெய்யநாதன் அவர்களும்,
• தமிழக அரசின் மாநில வளர்ச்சி கொள்கைக்குழு துணைத்தலைவர் முனைவர். ஜெ. ஜெயரஞ்சன்,
• மாநில வளர்ச்சி கொள்கைக்குழு உறுப்பினர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா,
• மாநில வளர்ச்சி கொள்கைக்குழு உறுப்பினர் மருத்துவர் கு.சிவராமன்,
• மத்திய மண்டல காவல்துறை தலைவர்
• திருமிகு. வி. பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்களும்,
• திருவாரூர் மாவட்ட ஆட்சியர்
• திருமிகு. பி. காயத்ரி கிருஷ்ணன் இ.ஆ.ப அவர்களும்
• சூழலியல் வல்லுநர் பாமையன்

பாரம்பரிய விருந்து

 விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் காலை உணவாக கேழ்வரகு கூல், மாப்பிள்ளை சம்பா கஞ்சி, கூல் வடகம் , கொத்தவரங்காய் வற்றல் வழங்கப்பட உள்ளது. மதிய விருந்தாக கருப்பு கவுணி அரிசியில் தயார் செய்த சர்க்கரை பொங்கல், கிச்சிலி சம்பா அரிசியில் தயார் செய்த சாம்பார் சாதம், மாப்பிள்ளை சம்பா அரிசியில் தயார் செய்த தயிர் சாதம் மதிய உணவாக வழங்கப்பட உள்ளது.

CMA எஸ். ராஜிவ்
விழா ஒருங்கிணைப்பாளர்

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories