தொடங்கியது அக்னி நட்சத்திரம்! செய்ய வேண்டியது , செய்யக் கூடாதவையும்!

அக்னி நட்சத்திரம் என்பது கோடைக்காலத்தில் வரக்கூடிய அதிக வெப்பம் நிலவக் கூடிய காலம். கோடைக் காலம் என்றாலே தமிழகத்தில் வெயில் வாட்டி எடுக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.

அக்னி நட்சத்திர காலம்
ஏற்கனவே கொரோனா வைரஸால் (Corona Virus) உலகமே ஆட்டம் கண்டு கொண்டிருக்கும் நிலையில், அக்னி நட்சத்திரம் (Agni Star) 2021 மே 4ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி வரை வர உள்ளது. இந்த காலகட்டத்தில் நாம் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாத முக்கிய விஷயங்கள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

செய்யக் கூடாதவை:
அக்னி நட்சத்திர நாட்களில் நாம் எந்த ஒரு செடி கொடிகளை அழிக்காமல், மரங்களை வெட்டக் கூடாது.
நார் உரிக்கவோ, விதை (Seed) விதைக்கவோ கூடாது.
நல்ல விஷயங்களான கிணறு, குளம் வெட்டுதல், தோட்டங்கள் அமைத்தலும் கூடாது.
நிலம் மற்றும் வீடுகளுக்குப் புதிதாக பராமரிப்பு செய்ய வேண்டாம்.
குறிப்பாக நெடுந்தூரம் வாகனங்களில் பயணம் (Long Travel) செய்யக் கூடாது.
அதிகளவு வெப்பம் நிலவுவதால், நாம் எண்ணியதை விட வேகமாக நம் உடலின் ஆற்றல் குறைவது, சோர்வடைதல், வலுவிழத்தல் நடக்கும் நாட்கள் இது. இதனால் அதிக நேரம் வெயிலில் இருக்கும் போது அது உயிருக்கே பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
செய்ய வேண்டியவை:
ஆலயங்களுக்கு செல்வதும், இந்த உலகத்திற்கே உணவளிக்கும் இறைவனுக்கு அபிஷேக, ஆராதனை நடத்துவது மிக நல்ல பலனை தரும்.
குறைவில்லாமல் தான – தர்மங்களை செய்யலாம்.
இந்த காலத்தில் தண்ணீர் பந்தல், மோர் பந்தல் அமைக்க இறைவனின் அருள் பெற சிறந்த வழி. முடிந்தால் நோயாளிகளூக்கு இளநீர் தருவதும் நல்லது.
ஏழைகளுக்கும், மாற்று திறனாளிகளுக்கு குடைகள், காலணிகளை வழங்குவதும், தயிர் சாதம் வழங்குவதும் மிக சிறந்த புண்ணியத்தைப் பெற்று தரும் என்றார்.
ஒருவர் மன நிறைவு அடைவது நீர் அருந்திய பின்னரும், உணவருந்திய பின்னரும் தான். நீங்கள் செய்யும் தண்ணீர் பந்தல், உணவளித்தல் பின்னர் ஒருவர் மகிழ்ந்தாலே இறைவனின் அருள் கிடைத்து விடும்.

முன்னோர்களின் செயல்:
கோடைக் காலத்தில் கிராமங்களில் உள்ள அம்மன் கோயிலில் திருவிழாவும், கூல் ஊற்றுதல் நிகழ்வுகளை நடத்தி வந்தனர். கோடைக் காலத்தில் வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்வதும், பானகம் வழங்குதல் செய்து வந்தனர். அதோடு கூல் ஊற்றுவதால் கோடைக் காலத்தில் உடல் சக்தியைப் பெறவும், நோய் கிருமிகளை அழிக்க மஞ்சள் தெளித்தலும், வேப்பிலை வீட்டின் முன் கட்டுதல் போன்ற செயல்களை செய்து வந்தனர். இன்றும் செய்து வருகின்றனர் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories