தொப்பையை வேகமாகக்குறைக்க சூப்பர் Drink!

கொரோனாக் காலம் நம்மை வீட்டிலேயே முடக்கியது என்பதைவிட, உடல் ஆரோக்கியத்திற்கு உலை வைத்துவிட்டது. இதன் விளைவாக, நம்மில் பலர், அதிக உடல் பருமன் காரணமாக, அவதிப்படும் சூழல் உருவாகியுள்ளது.
குறிப்பாக ஆண்களும், பெண்களும் அதிகம் சந்திக்கும் பிரச்னை தொப்பை. உடல் எடை அதிகரித்துள்ளதோடு, தொப்பையும் அதிகரித்து உடல் தோற்றத்தைக் கெடுக்கிறது.

உங்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கும் இந்தத் தொப்பையைக் குறைக்க, இந்த பானம் பெரிதும் கைகொடுக்கும். தொப்பைக் கரைக்கும் மேஜிக் பானத்தை,தினமும் அருந்தினால் தொப்பை வேகமாக கரையும். உடல் எடையும் வேகமாக் குறைவதைக் கூடாகக் காண முடியும்.தொப்பை, தொந்தி என்று சொல்லப்படும் இந்த வயிற்று கொழுப்பை கரைக்கும் மேஜிக் பானத்தை வெல்லம் மற்றும் எலுமிச்சையைக் கொண்டுத் தயாரிக்கலாம் என்றார்.

மந்திர டானிக்
உடல் எடையைக் குறைக்க ஆரோக்கியமான மற்றும் வழக்கமான உடற்பயிற்சி சிறந்த வழி என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் நேரமின்மையால் சிலர் உடற்பயிற்சி செய்ய முடியாத சூழ்நிலை இருப்பவர்களுக்கு இந்த ஆயுர்வேத பானம் பெரிதும் உதவும்.

தயாரிப்பு
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் வெல்லத்தை பொடியாக்கி கலக்கவும்.

இப்போது அதை நன்றாக கலந்து ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

இரண்டையும் மீண்டும் ஒருமுறை கலந்த பிறகு, உங்கள் பானம் தயாராகிவிடும்.

வெற்று வயிற்றில் தினமும் சாப்பிட்டு வந்தால் தொப்பை கரையும் இதில்

எப்படி செயல்படும்?
வெல்லம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது என்பதால், இது விரைவாக உடல் எடையை குறைக்க உதவுகிறது என்று நிபுணர்கள் உறுதி அளிக்கின்றனர். வெல்லத்தில் புரதமும், நார்ச்சத்துக்களும் அடங்கி உள்ளன. எடையைக் குறைக்கும் முயற்சியில் இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களும் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன என்றார்.

 

இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் அப்ரார் முல்தானி ஜீ நியூஸிடம் கூறுகையில், எலுமிச்சை உடலை சுத்தப்படுத்துகிறது என்பதோடு, எடை இழப்பு செயல்முறையை அதிகரிக்கிறது. எலுமிச்சையில் உள்ள பாலிஃபீனால் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் எடையை திறம்பட கட்டுப்படுத்த உதவுகிறது.
இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கவும், கெட்ட கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது. வெல்லம் மற்றும் எலுமிச்சை செரிமானம் மற்றும் சுவாச அமைப்புகளை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories