நன்கு உறக்கம் வருவதற்க்கு – உதவுகிறது முந்திரிப் பால்!

 

அவசரமான வாழ்க்கையில் தூக்கம் என்பது பலருக்கு அரிதான ஒன்றாக மாறிவருகிறது. ஏனெனில், அந்த அளவுக்கு அவர்கள் மனதை அழுத்தம் ஆட்கொண்டிருக்கிறது.இது மட்டுமல்ல, உணவு மற்றும் பானங்களை தவறான நேரத்தில் எடுத்துக் கொள்வது என தூக்கம் இல்லாமல் தவிப்பதற்கு காரணங்கள் பல உண்டு.

இருப்பினும் ,இந்தத் தூக்கமின்மையால், பல நோய்கள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. உடல் பருமன், இதய நோய்கள், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படவும் தூக்கமின்மை காரணியாக மாறுகிறது.ஆனால் உங்கள் பிரச்னைக்குத் தீர்வு காண இந்த ஒரு பானம். ஒரே ஒரு பானம், இதைக் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும்.இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கும், ஆழ்ந்த உறக்கம் இல்லாதவர்களுக்குமான இந்த பானம் சிறந்ததது. அதாவது இரவில் தூங்கும் முன் பாலைப் பருகினால், ஆழ்ந்த உறக்கம் கண்ணை அரவணைக்கும்.
இது மாட்டுப்பாலோ அல்லது எருமைப்பாலோ அல்ல, முந்திரிப்பால்.

தயாரிப்பது எப்படி?
ஒரு கைப்பிடி அளவு முந்திரியை எடுத்து, ஒரு கிளாஸ் பாலில் 4-5 மணி நேரம் ஊற வைக்கவும்.

முந்திரி நன்கு ஊறியதும், பாலில் இருந்து எடுத்து அதை அரைத்து வைக்கவும் மற்றும்

அரைப்பதற்கு பாலை சேர்த்துக் கொள்ளவும். இந்த பேஸ்ட் நன்கு மைய அரைபட்டிருக்க வேண்டும்.

நன்றாக நைஸாக அரைபட்ட முந்திரி விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு கொதிக்க வைக்கவும் இதில்

பால் கொதிக்க ஆரம்பித்ததும், தீயை குறைத்து 5-10 நிமிடங்கள்அடுப்பில் வைக்கவும்.

தேவைக்கேற்ப இன்னும் கொஞ்சம் பால் சேர்த்துக்கொள்ளலாம். பிறகு, பாலில் சுவைக்கேற்ப சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து, மேலும் 3-4 நிமிடங்கள் சமைக்கவும்.

இந்த முந்திரிப்பாலை சூடாகவோ, ஆற வைத்தோ அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து குளுமையாகவோ குடிக்கலாம்.

சர்க்கரை சேர்க்க விரும்பவில்லை என்றால், தேன் சேர்த்துக் கொள்ளலாம் எனவே

முந்திரியில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற மூலங்கள் நிறைந்துள்ளன.

முந்திரியின் ஆரோக்கிய நலன்களைப் பெற ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு அவுன்ஸ் (28.35 கிராம்) முந்திரியை உட்கொண்டால் போதுமானது என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories