நோய்எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் சீதாப்பழம்!

சீதாப் பழம் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிப்பதுடன், இரத்த அழுத்தத்தைக் குறைத்து, அஜீரணத்தை குணப்படுத்தவும் உதவுகிறது. எனவே இதனை உணவில் சேர்த்துக்கொள்வது, மழைக்கால நோய்களில் இருந்துத் தப்பிக்க உதவும்.

ஆரோக்கியத்திற்குப் பழங்கள் (Fruits for health)
நம்முடைய அன்றாட உணவுகளுடன் பருவகால மற்றும் உள்ளூர் பழங்களை சேர்க்க வேண்டும் என உணவியல் வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதை நம்மில் பலர் தவிர்த்தே வருகிறோம். இது போன்ற பழங்களை நாம் கட்டாயம் சாப்பிடவேண்டியக் காட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது என்றார்.

ஏனெனில் மழைக்காலம் நோய்களை அதிகம் கொண்டுவரும் என்பதால், இதனைக் கருத்தில்கொண்டு, பழங்களை சாப்பிடுவது நல்லது. அதிலும் குறிப்பாக, பருவ கால பழங்களுள் ஒன்றான சீதாப்பழத்தை முயற்சிக்கலாம். .

இனிப்புச் சுவை (Sweet taste)
இந்த இலையுதிர் காலத்தில் பரவலாகக் கிடைக்க கூடிய பழ வகைகளில் சீதாப் பழமும் ஒன்று. மகாராஷ்டிராவில் அதிகம் பயிரப்படும் இந்த பச்சை நிற பழம் அன்னாசி மற்றும் வாழைப்பழம் போன்ற ஒரு இனிமையான சுவை கொண்டது.

ஏன் சாப்பிட வேண்டும்? (Why eat?)
சீதாப் பழத்தில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் உங்கள் எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் ஆக்குகிறது எனவே

சீதாப்பழம் வைட்டமின் பி 6 நிறைந்த பழம் ஆகும். இதைச் சாப்பிடுவது வீக்கம் மற்றும் பிஎம்எஸ் (மாதவிடாய் முன் நோய்க்குறி) ஆகிய நோய்களை குணப்படுத்த உதவும்.

நீரிழிவு அல்லது இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்பட்டால், இந்தப் பழம் நல்லப் பலனை அளிக்கும் மற்றும்

சீதாப்பழம் அதிக உணவு நார்ச்சத்து நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும். அதே வேளையில், இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

மருத்துவ நன்மைகள்? (Medical benefits?)
சீதாப்பழம் உங்கள் மனநிலையையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

சீதாப் பழத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிரம்பியுள்ளன.

கண் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு இவை நன்மை பயக்கும் என்றார்.

இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

அஜீரணத்தை குணப்படுத்த உதவுகிறது

சீதாப் பழத்தில் புற்றுநோய் எதிர்ப்பு கூறுகள் இருப்பதாக நம்பப்படுகிறது என்று கூறினார்.

தகவல்
முன்முன் கணேரிவால்
ஊட்டச்சத்து நிபுணர்

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories