பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வழங்கப்படும் முட்டையுடன் ரொட்டியையும் சேர்த்து வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
பள்ளிக்கு வரும் மாணவர்கள் பசியோடு பாடம் கற்பதைத் தடுக்கவும், குடும்ப வறுமைக்காக படிப்பை இடையில் நிறுத்திக்கொள்ளும் நிலையை அடியோடு மாற்றவே அரசு ஆரம்பம் முதல் போராடி வருகிறது.
அந்த வகையில், பள்ளி மாணவர்களின் இடைநிற்றலைத் தவிர்க்க அரசுப்பள்ளிகளில் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் சராசரியாக 50 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் இந்த திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.800 கோடி வரை செலவிடுகிறது. தற்போது பள்ளிகள் மூடியுள்ள நிலையில் மாணவர்களுக்கு அரசின் சார்பில் அரிசி உள்ளிட்ட உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் குடும்ப பொருளாதார சூழலால் மாணவர்களின் இடைநிற்றலும் அதிகரித்துள்ளது.
இதனைத் தவிர்க்க சத்துணவில் முட்டையுடன் சேர்த்து ரொட்டி வழங்கலாமா? என்பது குறித்து தமிழக அரசு பரிசீலனை மேற்கொண்டு வருகிறது எனவே
இடைநிற்றல் அதிகரிப்பு (Intermittent increase)
குறிப்பாகப் பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாணவர்கள் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதன் காரணமாக பள்ளிகளில் இடைநிற்றல் கணிசமாக அதிகரித்து வருகிறது என்றார்.
எனவே குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சத்துணவு திட்டத்தில் முட்டையுடன் சேர்த்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ரொட்டி வழங்க அரசு ஆலோசித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.