பழங்களின் தோல்களை வீசாதீர்கள்- இதில் அதிக ஊட்டச்சுத்துகள் உள்ளது.

இயற்கையின் அத்தனைப் படைப்பிலும், நமக்கு நன்மை காத்திருக்கிறது. இதற்கு உதாரணம்தான் சிலப் பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோல்கள். அதனால்தான், குறிப்பிட்ட சிலப் பழங்கள், காய்கறிகளை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. ஏனெனில் அவற்றின் தோல், விதைகளில்தான் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றன.

பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கு முன்பு பெரும்பாலானோர் அவற்றின் வெளிப்புற தோலை நீக்கிவிடுவார்கள். உள்ளே இருக்கும் விதைகளையும் குப்பையில் போட்டுவிடுவார்கள். ஆனால் சிலவகை பழங்கள், காய்கறிகளை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. ஏனெனில் அவற்றின் தோல், விதைகளில்தான் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. அவை உடல் நலனை பேணுவதற்கும் உதவுகின்றன மற்றும்

எடை குறைக்க
சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றின் தோல்களில் கலோரிகள் குறைவாக இருப்பதால் அவை உடல் எடை குறைவதற்கு அடித்தளம் அமைத்து உதவும் என்றார்.

இதய ஆரோக்கியம்
தர்ப்பூசணி பழத்தின் தோலில் வைட்டமின் ஏ, சி, துத்தநாகம், மெக்னீசியம் போன்றவை நிறைந்திருக்கின்றன. கிவி பழ தோலில் வைட்டமின் சி, நார்ச்சத்துகள், பிளவனாய்டுகள் உள்ளன. அவை இதய ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பவை. இதேபோல் ஆரஞ்சு தோல்களில் இருக்கும் பிளவனாய்டுகள், நார்ச்சத்துகள், மெக்னீசியம் போன்றவை இதய ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பவை. புற்றுநோயை தடுக்கும் தன்மையும் கொண்டவை.எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாக கருதப்படும் வைட்டமின் Kவும் நிறைந்துள்ளது இதில்

செரிமானம்
கேரட் தோலில் கரையாத நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானத்திற்கு உதவும். மலச்சிக்கலையும் தடுக்கும். வயிற்றுக்கும் இதமளிக்கும் எனவே

சருமப் பாதுகாப்பு
உருளைக்கிழங்கு தோலில் இரும்பு, துத்தநாகம், வைட்டமின் சி உள்பட ஏராளமான வைட்டமின்கள் உள்ளன. பூசணி தோலில் ஆன்டிஆக்சிடென்டுகள், பீட்டா கரோட்டின் நிரம்பியுள்ளன. அவை விரைவில் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுத்து சருமத்திற்கு பொலிவும் சேர்க்கும் எனவே

 

ஊட்டச்சத்துகள்
பீர்க்கங்காய் தோலில் வைட்டமின் ஏ, பி 2, பி 3 மற்றும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் நிறைந்திருக்கின்றன. ஆப்பிள் தோலில் பாலிபினாலும், முலாம்பழ தோலில் பலவகை வைட்டமின்கள், புரதங்களும் இடம்பெற்றுள்ளன. வாழைப்பழ தோலில் வைட்டமின் பி 6, பி 12, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்திருக்கின்றன என்று தெரிவித்தார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories