பாதங்களை பாதுகாக்கும் பயனுள்ள பயிற்சிகள்

பாதங்களைப் பாதுகாப்பதற்கென்று சில பிரத்யேகமான பயிற்சிகள் இருக்கின்றன. பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist) அல்லது மருத்துவ வல்லுநரின் ஆலோசனை பெற்று இந்த பயிற்சிகளை முறையாக மேற்கொள்ளும்போது முழுமையான பலன்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

Ankle Stretch – ஒரு துணியின் விரிப்பில் இரண்டு காலையும் நன்றாக நீட்டி உட்காரவும். இப்போது நீளமான டவல் அல்லது பெல்ட் எடுத்துக்கொண்டு இரண்டு நுனிகளையும் இரண்டு கைகளில் பி்டித்துக் கொள்ள வேண்டும். நடுப்பகுதி விரல்களுக்கு கீழ் மேல் பாதங்களில் இருக்க வேண்டும். மேல் பாதத்தை டவலால் உட்புறமாக இழுத்து 20 வினாடிகள் வைத்திருக்க வேண்டும். இப்போது டவலை தளர்த்தி பாதங்களை நேராக வைக்கவும். இதேபோல் 5 முறை செய்யலாம் மற்றும்

Heel Raises – நுனிபாதத்தில் நின்று கொண்டு குதிகாலை உயர்த்தி சில நிமிடங்கள் நிற்கவும். பின்பு குதிகாலை இறக்கி வைக்கவும். இதை 20 முறை செய்ய வேண்டும்.

Heel drop Stretch – இப்போது படிக்கட்டின் நுனியில், நுனிகாலால் நின்று கொண்டு, மெதுவாக குதிகாலை கீழ்நோக்கி இறக்க வேண்டும். இதை மேலே சொன்ன குதிகால் உயர்த்தும் பயிற்சிக்கு நேர்மாறாக குதிகாலை இறக்கும் பயிற்சி. இப்பயிற்சியையும் 20 முறை செய்யலாம் மற்றும்

Heel walking exercises – இப்பயிற்சிக்கு தட்டையான ஷூக்கள் (Shoes) அணிந்து கொள்ள வேண்டும். பாதங்களை உயர்த்தி, குதிகாலால் மெதுவாக சில நிமிடங்கள் நடக்கவும் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories