பாம்பு, பல்லி, பூச்சிக்கடியா..? வீட்டிலேயே எளிய முதலுதவி செய்யலாம்!

பூச்சிக் கடியைப் பொருத்தவரையில், ஒவ்வொரு பூச்சிக்கும் ஒவ்வொரு வகையாக விசத்தன்மை உண்டு. அப்படி எந்தெந்த பூச்சிகள் கடித்தால் என்னென்ன இயற்கை மருந்துகள் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

பூச்சிக் கடிகளை கண்டறிதல்
இரவில் விசப்பூச்சிகள் ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம். அப்படி கடிபட்டவருக்கு ஆடு தின்னாப்பாலை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சாப்பிடச் சொல்வார்கள். அல்லது வேப்பிலை கொடுப்பார்கள். அதை சாப்பிட்டதும் இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்ல பாம்பு என்றும் புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டு விரியன் பாம்பு என்றும் வாய் கொஞ்சம் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு, தண்ணீர் பாம்பு போன்றவை கடித்திருக்கும் என்றும் கசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு தவிர வேறு விஷமல்லாத பூச்சிக்கடி என்று கண்டுபிடிப்பார்கள்.

​தேள் கடி
எலுமிச்சைப் பழ விதைகளை உப்புடன் சேர்த்து அரைத்துக் குடித்தால் தேள் கடித்த நஞ்சு இறங்கி விடும் என்பார்கள். அதோடு கடித்த இடத்தில் எலுமிச்சை சாறையும் உப்பையும் கலந்து தடவினால் நலம் கொடுக்கும். புளியங்கொட்டையைச் சூடு பறக்கத் தேய்த்து தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும். நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்து விடும். சிறிது நாட்டுச் சர்க்கரையை சிறிது சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும்.

குப்பை மேனி இலையைப் பறித்து நன்றாக நீரில் கழுவிவிட்டுப் பின்பு கசக்கிச் சாறு எடுத்துத் தேள் கடித்த இடத்தில் தடவ வேண்டும். அத்துடன் கசக்கிய இலையைக் கடிவாயில் வைத்துக் கட்டி விட்டால் நஞ்சு இறங்கும். தேளில் பெரிய சைஸில் இருக்கும் நட்டுவாய்க்காலி கொட்டினால் கொப்பரைத் தேங்காயை வாயில் போட்டு மென்று பால் வரத் தின்றால் உடன் நஞ்சு நீங்கும் மற்றும்

வெறி நாய் கடி
நாயுருவி இலையின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சம அளவு எடுத்து எலுமிச்சைச்சாறு சேர்த்து அரைத்து அதில் எலுமிச்சைப் பழம் அளவிற்கு உருண்டை பிடித்து காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எப்பேர்ப்பட்ட வெறிநாய்க்கடியும் குணமாகும் என்றார்.

​பாம்பு கடி
வாழை மரம் ஒன்றை அடியிலும் நுனியிலும் வெட்டி ஆறு அடி நீளத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் மடல்களைப் பிரித்து படுக்கை போல அமைத்து அதில் பாம்பு கடித்தவரை படுக்க வைக்க வேண்டும். அதோடு வாழைப்பட்டைச் சாறை குறைந்தது அரை லிட்டர் அளவு வாயில் ஊற்றி விட வேண்டும். அரை மணி நேரத்தில் விஷம் நீங்கி, எழுந்து நடக்க ஆரம்பித்துவிடுவார்கள் எனவே

​எலி, பெருச்சாளி கடிக்கு
நாயுருவியின் விதையை வெய்யிலில் காய வைத்துப் பொடி செய்ய வேண்டும். இந்தப் பொடியை காற்று புகாத இறுக்கமாக பாட்டிலில் போட்டு மூடி வைத்துக் கொள்ள வேண்டும். எலி, பெருச்சாளி ஏதேனும் கடித்துவிட்டால், இந்தப் பொடியில் மூக்குப் பொடி அளவு விரல்களில் எடுத்துத் தேனில் குழைத்துக் காலையிலும் மாலையிலும் தொடர்ந்து அரை மண்டலம் (24 நாட்கள்) சாப்பிட வேண்டும். இப்படிச் சாப்பிட்டால் நஞ்சு நீங்கும். உடலுக்குள் சென்ற எந்த நஞ்சாக இருந்தாலும் வாந்தி மூலம் வெளியேறிவிடும். வாந்தி ஏற்பட்ட பின்பு எலுமிச்சைப் பழத்தைத் தண்ணீரில் பிழிந்து குடித்து விட்டால் நஞ்சு முறிந்து போகும்.

இவை எல்லாமே முதலுதவியாக செய்து கொள்ளலாம். பக்க விளைவுகள் அல்லாதது. ஆனால் முதலுதவி செய்து கொண்ட பின், முறையாக மருத்துவரைச் சந்தித்து பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்றார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories