பால் பிரியர்களாக இருக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கு கொண்டாட்டம்:லாக்டோஸ் இல்லாத பால்

உலகம் முழுவதிலும் பல கோடி மக்களை சர்க்கரை நோய் ஆட்டிப்படைக்கிறது, சுவையான இனிப்புகள், ஜூஸ், பழங்கள், பானங்கள் மட்டுமில்லாமல் நிம்மதியாக பசு மாட்டு பாலை கூட அவர்களால் குடிக்க முடிவதில்லை. ஏன்னென்றால் பாலில் இருக்கும் லாக்டோஸ் எனப்படும் ஊட்டச் சத்து, நீரிழிவு நோயாளிகளுக்கு பெருமளவில் தீங்கு விளைவிக்கக்கூடும்.

இதில் சர்க்கரை சுவை அதிகம் இருப்பதே இதற்கு காரணம். லாக்டோஸ் கொண்டிருக்கும் பாலை குடித்தால்,உடலில் சர்க்கரை வீதம் அதிகரித்து விடும்,நீரிழிவு நோயாளிகள் மட்டுமல்ல, உலகில் 70 சதவீதம் பேருக்கு லாக்டோஸ் ஒவ்வாமை இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது எனவே

இப்படிப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மாட்டு பாலை குடிக்கவில்லையே என்ற ஆதங்கமும், கவலைகளும் விரைவில் ஒழிய போகிறது.அது எப்படி என்று பார்க்கலாம்.
அதாவது லாக்டோஸ் இல்லாத பாலை கொடுக்கும் பசுவை குளோனிங் மூலம் ரஷிய விஞ்ஞானிகள் தயார் செய்துள்ளனர். “ஸ்கொலகோவோ அறிவியல் தொழில்நுட்ப நிலையம்” ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ அருகில் செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு அங்கமாக எர்னஸ்ட் கூட்டு கால்நடை அறிவியல் மையமும் உள்ளது. இதில் பணிபுரியும் விஞ்ஞானியான “காலினா சிங்கினா” தலைமையிலான குழு, லாக்டோஸ் இல்லாத பாலை கொடுக்கும் ஒரு பசுவை குளோனிங் மூலம் தயார் செய்துள்ளனர் என்றார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி 63 கிலோ எடையுடன் பிறந்த பசு தற்போது 410 கிலோ எடையுடன் பசுவாக வளர்ந்துள்ளது,இந்த பசுவின் மரபணுவிலிருந்து லாக்டோஸ் எனப்படும் சத்தை உருவாக்கும் “பீட்டா லாக்டோ குளோபலின்” என்ற மரபணுவை நீக்குவதில் இந்த விஞ்ஞானிகள் வெற்றியடைந்துள்ளார்கள். மேலும் லாக்டோஸ் இல்லாத பாலை கொடுக்கும் பசுவை தயார் செய்து சாதனை படைத்துள்ளனர் இதில்

இந்த பசு இனம் அதிகளவில் பெருக்கப்பட்டால் ‘லாக்டோஸ் பால் ஒவ்வாமை’ நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் அனைவரும், வரும்காலத்தில் பசு மாட்டு பாலை தயக்கமின்றி குடித்து மகிழலாம் என்றார்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories