முடிந்தவரையில் தற்சார்பு

முடிந்தவரையில் தற்சார்பு

நேற்று ஒரு விளம்பர கம்பெனி வந்தது.. உங்களுக்கு அழகான விளம்பர poster செய்து தரோம்…பாக்க நல்ல rich look இருக்கும் .. அப்போ தான் மக்கள் கிட்ட நல்ல ரீச் இருக்கும்னு சொன்னாங்க..

ஆனா அவங்க சொன்னதுல கொஞ்சம் உண்மையும் இருந்துச்சு.. என்ன தான் சுத்தமா நாம நஞ்சில்லாம விவசாயம் செஞ்சாலும் விளம்பரம் நல்லா இல்லனா.. மக்கள் கிட்ட நாம போய் சேர பல காலம் ஆகும்!!

ஏன்னா இது வேகமான உலகமாம்.. நம்ம கிட்ட இல்லனா இன்னொர்த்தர் கிட்ட வாங்கிப்பாங்க!! ( அப்படினு பேசுன விளம்பர கம்பெனிகார் சொன்னாருங்க)

சரிங்க உங்க பீஸ் எவ்ளோ கேட்டேன்!!

அவங்க ஒரு போஸ்டர் ₹2000/- only சொன்னாங்க!!…

அடகொப்பா.. நான் 100லி எண்ணெய் வித்தா கூட ₹2000 ஓவா தேராதேடா எப்படி ஒரு போஸ்டருக்கு கொடுப்பேன் நெனச்சுகிட்டு!! சரிங்கனா நாம அந்த அளவு சம்பாதிச்சுட்டு உங்க கிட்ட வரேன்னு கால் வச்சிட்டேன்!!

ஆனாலும் நாம என்ன தான் photo editor software LA phone போட்டு poster டிசைன் பன்னாலும் அது கலர் பேப்பர் ல விலை பட்டியல் எழுதின மாதிரி தான் இருக்கு!!

Photoshop லா இப்போ கத்துகிட்டு ரெடி பன்ற அளவு பொருமை இல்ல நமக்கு … அப்போ தான் Pixlr online போட்டோ எடிட்டர் website ல எளிமையா யாரு வேனுலும் எடிட் பன்னாலும்னு பார்த்தேன்.. எளிமையாதா இருக்கு!!

நம்ம கற்பனை வளத்த ஓடவிட்டு இதோ நம்ம அறல் கழனி ல விளைஞ்ச பொருட்களின் விலை பட்டியல தயாரிச்சிருக்கேன்.. எப்படி இருக்குனு சொல்லுங்க!!

மற்ற விவசாயிகளும் இது போன்ற மென்பொருட்கள எளிமையா பயன்படுத்தி உங்ககிட்ட இருக்கற பொருட்கள பட்டியலிடுங்க!!

விளம்பரம் முக்கியம் உழவரே

இயற்கை வழியில் இயன்ற வேளாண்மை செய்வோம்

– உழவர் வ.சதிஸ்.,B.E (Civil),
அறல் கழனி,
கோட்டப்பூண்டி,
செஞ்சி,
8940462759

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories