முட்டையில் இருக்கும் சூப்பர் சத்துக்கள் என்னென்ன?

முட்டை, சைவமா இல்லை அசைவமா என்ற கேள்வி பெரிய கேள்வியாக தொடர்ந்து சர்ச்சையில் உள்ளது. ஆனால், இறைச்சி உணவுகளை உட்கொள்ளத்தவர்கள் கூட முட்டை சாப்பிட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

அதும், கோவிட் நோய் தொற்று பரவியிருக்கும் இந்த காலத்தில் தினம் ஒரு முட்டை சாப்பிடுவது என்பது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். முட்டையில் பல்வேறு சத்துக்கள் இருக்கின்றன என்பது அனைவர்க்கும் தெரியும். ஆனால், மூளையின் இயல்பான செயல்பாட்டுக்கு தேவையான வைட்டமின்கள் பி 6 மற்றும் பி 12, ஃபோலேட் மற்றும் கோலின் உள்ளிட்ட பல ச்சத்துக்களின் சிறந்த ஆதாரமாக முட்டை உள்ளது எனவே

கோலின் ஒரு முக்கியமான ஊட்டசத்து ஆகும், இது உடலில் அசிடைல்கொலின் உருவாக்க உதவுகிறது, இது மனநிலை மற்றும் நினைவகத்தை சீராக்க உதவும் நியோரோ-ட்ரான்ஸ்மிட்டர் ஆகும்.

கோலின் அதிக அளவில் உட்கொள்வது சிறந்த நினைவாற்றல் மற்றும் மன செயல்பாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக இரண்டு ஆய்வுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் பலருக்கு உணவில் போதிய அளவில் கோலின் கிடைப்பதில்லை இதில்

தினசரி உணவில் முட்டைகளை சேர்ப்பதன் மூலம் கோலின் சத்தைப் பெற ஒரு எளிய வழியாகும், ஏனெனில் இந்த ஊட்டச்சத்தின் அதிக செறிவூட்டப்பட்ட ஆதாரம் முட்டையின் மஞ்சள் கருவில் உள்ளன.

ஒரு நாளைக்கு பெண்களுக்கு 425 மி.கி மற்றும் ஆண்களுக்கு 550 மி.கி கோலின் தேவைப்படுகிறது. ஒரு முட்டையின் மஞ்சள் கரு 112 மி.கி இருக்கும். மேலும், முட்டைகளில் காணப்படும் பி வைட்டமின்கள் மூளையின் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஹோமோசிஸ்டீன் என்ற அமினோ அமிலமான அளவு உடலில் குறைந்தால் வயதானோருக்கு அல்சைமர் நோய் ஏற்படுகிறது. முட்டை சாப்பிடுவதால், அதில் இருக்கும் ஹோமோசிஸ்டீன் அல்சைமர் நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

மேலும், இரண்டு வகையான பி வைட்டமின்கள் மற்றும் பி 12 ஆகியவற்றில் குறைபாடு இருந்தால் மனச்சோர்வு ஏற்படும் அபாயம் இருக்கிறது. முதுமை மற்றும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஃபோலேட் குறைபாடு ஏற்படுவது பொதுவான விஷயம், ஃபோலிக் அமிலம் முட்டையில் அதிகம் உள்ளது. தினசரி முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை சீராக்கும் என்றார்.

முட்டையில் உள்ள வைட்டமின் பி 12, மூளை ரசாயனங்களை ஒருங்கிணைந்து மூளையில் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துவதிலும் பங்காங்க உள்ளது. முட்டை சாப்பிடுவதற்கும் மூளை ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து நேரடி ஆராய்ச்சி மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், முட்டைகளில் காணப்படும் குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கல் மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றனர்.

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories