முருங்கைக்கீரையில் இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறது!

பொதுவாகவே அனைத்து விதமான கீரைகளும் ஊட்டச்சத்துக்கள், தாதுக்களின் சுரங்கம் என்று சொல்லலாம். பச்சை கீரைகளில், வைட்டமின் சி, போலிக் அமிலம்,மேக்னிசியம், பொட்டாசியம், நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் பீட்டாகரோடின் நிறைந்துள்ளன இதில்

முருங்கைக்கீரை,அதிகம் சத்துக்கள் நிறைந்த பச்சை கீரைகளின் பட்டியலில் முதல் ஐந்து இடத்திற்குள் வருகிறது என்றார்.

முருங்கைக் கீரையில் கலோரி மிகவும் குறைவாக இருப்பதால், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க மிகவும் உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்திருப்பதால், செரிமானப் பிரச்னைகளைத் தவிர்க்கவும் புற்றுநோய், இதய நோய்க்கான வாய்ப்பையும் குறைக்கிறது. எனவே

குளோரோஜெனிக் அமிலம் எனப்படும் நிறமி அதிகளவு இருப்பதால், முருங்கைக்கீரையை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். உடலில் தேவையில்லாமல் சேர்ந்திருக்கும் கொழுப்பைக் குறைக்கவும் முருங்கைக்கீரை உதவுகிறது என்றார்.

முருங்கைக் கீரையை வாரத்தில் இரு முறை சாப்பிட்டால், எலும்பு, பற்கள் வலுப்பெறும், ரத்தசோகைக் கட்டுக்குள் வரும் என்று கூறப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. ஆண்மையை அதிகரிக்கச் செய்யும் மருந்தாகவும் கருதப்படுகிறது இதில்

உடல் சூட்டை தணிக்கும் முருங்கைக் கீரை பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிட்டால், உடல் சூட்டினால் ஏற்படும் தலைவலி மாயமாய் மறையும். உடம்பு வலி ,கை, கால் வலி, மூட்டுவலியைக் குணமாக்கும் முருங்கைக்கீரையை பொரியலாக செய்து சாப்பிடலாம்.

பார்வைத்திறனை சீராக்கும் முருங்கைக்கீரை, செரிமானக் கோளாறு, மந்தத்தன்மை ஆகிய பிற பிரச்சனைகளையும் சீராக்குகிறது என்றார்.

ஆயுர்வேதம் மருந்துகளில் ஒரு மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படும் முருங்கைக்கீரையின் சாற்றைத் தலைக்குத் தேய்த்து குளித்தால், பொடுகுப் பிரச்னை குறையும்.

முருங்கையில் அதிகளவில் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் ஏ, புரதம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் முக்கியமான அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. பூஞ்சை காளான், வைரஸ் தடுப்பு, ஆண்டிடிரஸன் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் காணப்படுகின்றன. முருங்கைக்கீரையை காயவைத்து பொடியாக பயன்படுத்தலாம்.மற்றும் முருங்கைக்காய் விதைகளுக்கு மருத்துவ குணங்கள் உண்டு என்று கூறினார்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories