ரசாயனப் பூச்சிக்கொல்லிக்கு பதிலாக உயிரி பூச்சிக் கொல்லி!

ரசாயனப் பூச்சிக்கொல்லிக்கு பதிலாக உயிரி பூச்சிக் கொல்லி!

மத்திய அரசின் பூச்சிக் கொல்லி உருவாக்க தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎஃப்டி (IBFD), ரசாயன பூச்சிக் கொல்லிகளுக்கு பதிலாக உயிரி பூச்சிக் கொல்லியை உருவாக்கியுள்ளது சாதனை படைத்துள்ளது.

ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் ரசாயனங்கள் மற்றும் பெட்ரோகெமிக்கல் துறையின் கீழ் இயங்கும் ஐசிஏஆர் ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் உள்ளது. இந்த நிறுவனம் தேசிய விதை வாசனைப் பொருட்கள் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து இந்த உயிரி பூச்சிக்கொல்லியை உருவாக்கியுள்ளது.

விதை வாசனைப் பொருட்களான வெந்தயம், சீரகம், கொத்தமல்லி ஆகியவற்றில் உள்ள பல்வேறு பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் இந்த உயிரி பூச்சிக்கொல்லி சிறப்பாக செயல்படுவதாக பூச்சிக்கொல்லி உருவாக்க தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் ஜிதேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலம் வரை பயன்படுத்தக்கூடிய இந்த பூச்சிக்கொல்லி பயன்படுத்துபவருக்கும் சுற்றுப்புறச் சூழலுக்கும் எவ்வித கெடுதலையும் ஏற்படுத்தாது, நட்பானது என்றும் அவர் மேலும் கூறினார். விதை வாசனைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களின் மீதும் இதை பயன்படுத்தலாம். இந்த உயிரி பூச்சிக்கொல்லி மருந்துக்கு காப்புரிமை கோரப்பட்டுள்ளது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories