வயிற்றுப் பிரச்னையை அடியோடு தீர்க்கும் கொய்யா பழம்

 

நல்லத்தரமான மற்றும் சத்தானக் காய்கறிகளையும், பழங்களையும் தேடித் தேடி வாங்கிச் சாப்பிடுவது நம் ஆரோக்கியத்திற்கு அடித்தளம் அமைக்கும். அதேநேரத்தில் ஆரோக்கியத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் பிள்ளையார் சுழி என்றால் அது வயிற்றுச் சிக்கல்தான்.

ஆக இந்த வயிற்றைச் சுத்தமாக வைத்துக் கொண்டாலேப் பெரும்பாலான நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். அந்தவகையில் வயிற்றை இயற்கையாக சுத்தம் செய்ய கொய்யாவில் பல விஷயங்கள் உள்ளன எனவே

தவறான உணவுப் பழக்கம், செயலற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம் போன்றவற்றால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள நாம் எடுக்கும் முயற்சி பலன் கொடுக்கவில்லைலை என்றால், கொய்யாப் பக்கம் திரும்புங்கள் ஏனெனில், வயிறு சிக்கலுக்கு கொய்யாவே நிரந்திரத் தீர்வு கொடுக்கும் இதில்

ஊட்டச்சத்து (Nutrition)
ஊட்டச்சத்து நிறைந்த கொய்யாவில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து உள்ளது. இது தவிர, கொய்யாவில் வைட்டமின் சி, வைட்டமின் பி6 ஆகியவையும் கொட்டிக்கிடக்கின்றன. இவை அனைத்துக்கும் மேலாக உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும், கால்சியம், இரும்பு மற்றும் மெக்னீசியம் சத்துகளும் உள்ளன என்றார்.

வயிற்று வலி (Abdominal pain)
கொய்யாவைச் சரியான முறையில் சாப்பிட்டு வந்தால், வயிற்று வலிக்கு நிவாரணம் கிடைக்கும். கொய்யாவை மென்று சாப்பிடுங்கள், ஆனால் அதன் விதைகளை மென்று சாப்பிடுவதை தவிர்க்கவும். இது உங்கள் வயிற்று வலி பிரச்சனையை அதிகரிக்கலாம் மற்றும்

மலச்சிக்கல் (Constipation)
மலச்சிக்கலைப் போக்க கொய்யா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கொய்யாவில் போதுமான அளவு நார்ச்சத்து உள்ளது. இது குடல் இயக்கத்தை எளிதாக்கி, செரிமானத்தை மேம்படுத்துகிறது.

பைல்ஸூக்கு தீர்வு (Solution to piles)
பைல்ஸ் எனப்படும் மூலம் நோயைக் குணப்படுத்த, மலச்சிக்கலைக் குணப்படுத்துவது அவசியம். அதனால், கொய்யா சாப்பிடுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். பழுத்த கொய்யாவை சாப்பிடுவதால் மலச்சிக்கலுக்கான தீர்வு உடனே கிடைக்கும். இதன் மூலம் பைல்ஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது இதில்

அமிலத்தன்மை சிக்கல்
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் வாயு மற்றும் அமிலத்தன்மை பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். உடலில் தேங்கியிருக்கும் வாயுவையும் வெளியேற்றும். வயிறு உப்புசம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் இதன் மூலம் தீர்வு கிடைக்கும். கொய்யாவின் பலன்கள் இவை என்பதால், வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாக இதனைக் கருதக்கூடாது என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories