வழக்கமான உடற்பயிற்சியா? 10,000 ஸ்டெப்ஸ் நடப்பதா? இரண்டில் எது நன்மை தரும்.

வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக ஏராளமான உடல்நல கோளாறுகள் இளவயதினருக்கு கூட ஏற்படும் நிலையில், நோய்களில் இருந்து தற்காத்து கொள்ள தினசரி உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்வது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. சிலர் ஜிம்முக்கு சென்று 30 முதல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி (Excercise) செய்கின்றனர். இன்னும் சிலர் தினமும் 10,000 ஸ்டெப்ஸ்கள் என்ற வீதத்தில் தவறாமல் வாக்கிங் செல்கின்றனர். இவற்றில் எது சிறந்தது என்பதைப் பார்ப்போம்.

உடற்பயிற்சிகள்
குறைந்தபட்சம் வாரத்திற்கு 150 நிமிடங்கள் செய்யப்படும் மிதமான மற்றும் அதி தீவிர உடற்பயிற்சிகளின் கலவை ஆரோக்கியமாக இருக்க உதவும் என பரிந்துரைக்கப்படுகிறது. வாரத்திற்கு 5 நாட்கள் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது, மருத்துவ ரீதியாக பரிந்துரைக்கப்பட்ட அளவுகோலை அடைய உதவும் என்றும் குறிப்பிடப்படுகிறது. இருப்பினும் ஒருவருக்கு உடற்பயிற்சிகள் செய்ய நேரம் இல்லை என்றால் அல்லது அதி தீவிர யிற்சிகளை செய்ய முடியாத நிலை இருந்தால் நாளொன்றுக்கு 10,000 ஸ்டெப்ஸ்கள் நடப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எனவே

எவ்வாறாயினும் உடல் செயல்பாடுகளின்றி உட்கார்ந்தே இருக்காமல் சுறுசுறுப்பாக இயங்குவது ஆரோக்கியத்திற்கு முக்கியம். வழக்கமான உடற்பயிற்சி நன்மைகளை அளிப்பதோடு உடல் எடையை குறைக்க உதவுகிறது என்பதை அனைவரும் அறிவோம். தினமும் 10,000 ஸ்டெப்ஸ்கள் நடப்பது ஆரோக்கியத்திற்கு எப்படி உதவுகிறது என்பதற்கு நிபுணர்கள் அளிக்கும் பதிலை பார்ப்போம்.

வாக்கிங் கார்டியோ உடற்பயிற்சியின் ஒரு வடிவமாக இருப்பதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
மூட்டுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
மன அழுத்தத்தைக் குறைத்து மூளை செல்களை தூண்டி அறிவாற்றலை மேம்படுத்த உதவுகிறது.
மிதமான வேகம் அல்லது வேகமாக 10,000 ஸ்டெப்ஸ் நடந்து செல்வது எடையைக் குறைக்க போதுமான கலோரிகளை எரிக்க உதவும் என்றார்.
ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.
எக்ஸர்சைஸ் மற்றும் வாக்கிங் (10000 ஸ்டெப்ஸ்) ஆகிய இரண்டுமே இரண்டுமே இதய ஆரோக்கிய மேம்பாடு, சுறுசுறுப்பான வாழ்க்கை முறை, வாழ்க்கை முறை நோய்களின் ஆபத்து காரணிகளை குறைத்தல் உள்ளிட்ட பல பொதுவான நன்மைகளை வழங்குகின்றன

வாக்கிங்
வாக்கிங் என்பது குறைவானது முதல் மிதமான தீவிரம் கொண்ட பயிற்சியாகும். இது வேலை அல்லது வாழ்க்கை முறை, அதிக வேலை மற்றும் செயல்பாடு தேவைப்படாதவர்களுக்கு சரியாக இருக்கும். ஆனால் மிகவும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை கொண்ட ஒரு நபருக்கு அல்லது விளையாட்டு வீரர்கள், மலையேறும் பழக்கம் உடையவர்களுக்கு அதி தீவிர உடற்பயிற்சிகளின் கலவை தேவைப்படுவதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

 

 

இரண்டில் எது சிறந்தது என்ற கேள்விக்கு நிபுணர்கள் தரும் பதில் உடற்பயிற்சி மற்றும் வாக்கிங் ஆகிய இரண்டுமே ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான பொதுவான நன்மைகளையே வழங்குகின்றன. இரண்டில் எதை நீங்கள் தேர்வு செய்தாலும் கலோரிகளை எரிக்க மற்றும் எடையை குறைக்க உதவுகின்றன. எனவே அவரவர் விருப்பம் மற்றும் சௌகரியத்திக்கேற்ப வாக்கிங் அல்லது உடற்பயிற்சி ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து பின்பற்றலாம் என்று கூறினார்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories