வாழ்வு தொடங்கும் போதே வளமனைத்தும் இணைத்துள்ளேன்

அன்பான உழவர்கள் மற்றும் நுகர்வோர் அனைவருக்கும் பசுமை நிறைந்த வணக்கம் நேற்று மண்ணில் விதைகளாக விதைக்கப்பட்ட இயற்கை பேராற்றல் தந்தை பெரியார் அய்யா நம்மாழ்வார் அவர்கள் நாள் தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் விதையாக விதைத்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது இருந்தாலும் அவர்கள் ஆன்மாவின் என்னங்கள் செயல் ஆற்றலாகும் போது ஆன்மாவின் சாந்தமும் பெரும் ஆகையால் நிகழ்வு மட்டுமே போதாது அவர்கள் என்னங்கள் செயல் ஆற்ற வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன் மேலும்

வாழ்வு தொடங்கும் போதே வளமனைத்தும் இணைத்துள்ளேன்

வறுமையும் நோயும் நம் செயல் விளைவால் வந்த பயன்

பல ஆண்டுகளாக மோட்ச விரும்பியதாக இருக்க அய்யா நம்மாழ்வார் வணங்கினோம்

பல ஆயிரம் பணிகள் செய்து பல பேருக்கு விதைத்து விதைக்கப்பட்ட அய்யா நம்மாழ்வார் வணங்கினோம்

சமூக பணிகளை சளைக்காமல் செய்து மண்ணில் விதைகளாக விதைக்கப்பட்டிற்கும் அய்யா நம்மாழ்வார் அவர்கள் வணங்குகிறோம்

சாதி பேதம் இல்லாமல் அனைத்து தரப்பினரும் தற்சார்பு வாழ்வியல் உருவாக்கிய அய்யா நம்மாழ்வார் அவர்கள் வணங்குகிறோம்

தமிழகத்தில் இயற்கை வழி வேளாண்மை மரபுவழி அறிவு நுட்பம் மண்ணில் மலர செய்த அய்யா நம்மாழ்வார் அவர்கள் வணங்குகிறோம்

பாராட்டுக்கள் பல பெற்று பலபேர் விதைகளாக வித்திட்டு சென்ற அய்யா நம்மாழ்வார் அவர்கள் வணங்குகிறோம்

புது சமுதாயம் படைத்து விட்டு புவி எங்கும் விதைகளாக விதைக்கப்பட்ட அய்யா நம்மாழ்வார் வணங்கினோம்

புது வாழ்வியல் அமைத்து கொடுத்த புதல்வர் அய்யா நம்மாழ்வார் வணங்கினோம்

மரபுவழி அறிவு நுட்பம் பாரம்பரிய அறிவு நுட்பங்கள் மீட்டெடுத்த சூழலை உருவாக்கி கொடுத்த செந்தமிழர் அய்யா நம்மாழ்வார் வணங்கினோம்

நல்ல பல தற்சார்பு வாழ்வியல் உயர்த்தி அறிவியல் இனையான் அறிவு நுட்பங்கள் வழங்கிய அறிவியல் களஞ்சியம் அய்யா நம்மாழ்வார் வணங்கினோம்

மறுக்கப்படும் உரிமைக்காய் தெருவில் வந்து உயிர் உள்ளவரை போராட்டத்தில் விதைகளாக் விதைக்கப்பட்ட அய்யா நம்மாழ்வார் வணங்கினோம்

நீங்கள் மறைந்தாலும் நீங்கள் என்றும் விருட்சமாக பரந்த உலகில் இருக்க வணங்குகிறோம்

உங்கள் தொடர் பயணத்தை பல இளைஞர்கள் பட்டாளத்தை வழி நடத்தி விட்டு விதைக்கப்பட்ட அய்யா நம்மாழ்வார் வணங்கு கினோம்

உங்கள் தொடர் பயணம் பணிகள் எங்கள் உயிர் மூச்சு விதைக்கும் வரை உங்கள் பயணம் தொடர்ந்தது கொண்டு இருக்கும் தொடர்ந்து விதையுங்கள் அவ்விதைகள் பல வித்துக்கள் நிமிர்ந்து என்றும் அணையா விளக்காக இருக்கும் எங்கள் பேராற்றல் தந்தை பெரியார் அய்யா நம்மாழ்வார் அவர்கள் வணங்குகிறோம்

 

குறள்

செயதக்க அல செயக்கெடும் செயதக்க செய்யாமை யானும் கெடும்

ஓட்டக்கூடாதது பூமியில் உழவு
ஒட்டவைக்குணும் பூமியில் மண்புழுக்கள்

தவிர்க்க வேண்டியவை பூமியில் டிரேக்டரூம் டில்லரூம்

வளர்க்க வேண்டியது பூமியில் மண்புழுக்கள்

கேட்க்கவேண்டாம் வேளாண்மை துறை பேச்சை
பார்க்க வேண்டும் இயற்கை விவசாயியின் கணக்கை

அடிக்க வேண்டாம் கலைக்கொல்லி விஷத்தை
நிலம் குடிக்க வேண்டும் கலைச்செடி ரசத்தை

அரப்பும் மோரூம் இளநீர் இருக்க

சைக்கோ நாடுகளில் வரும் சைட்டோசைம் எதற்கு

அசோஸ்பைரில்லம் இருக்க
அமோனியம் குளோரைடு எதற்கு

பாஸ்போ பாக்டீரியா இருக்க
பாழாய் போன டீ ஏ பி எதற்கு

மூடாக்கு போட்டால் கவிதை வரும் உனக்கு
இல்லையேல் மூழ்கிப் போவாய் உன் கண்ணீரில்

போட வேண்டும் பூமியில் மூடாக்கு
சாட வேண்டும் பூமியில் தீயை

ரசிக்க கூடியது இயற்கையின் அழகை
ருசிக்க கூடாதது ரசாயனம் என்னும் விஷத்தை

பேஸ்ட்டும் பிரஸும் வேண்டாம்
ஆலும் வேலும் போதும்

மனிதர்கள் தவிர்க்க வேண்டியவை டீ
குடிக்க வேண்டும் மூலிகை டீ

மனிதன் வயிற்றில் இருப்பது உயிரினங்களானால்
மண்ணில் வயிற்றில் இருப்பது உயிரினங்கள் தானே

தடுக்க வேண்டியது பெப்சியும் கோக்கும்
குடிக்க வேண்டியது இளநீர் சுக்குமல்லியும்

தவிர்க்க வேண்டியவை வீட்டில் ஏசி
தளிர்க்க வேண்டும் மரம் என்னும் ஏசி

செலவில்லாமல் கிடைக்கும் மரத்தின் காற்று
செலவோடு கிடைப்பது ஓசான் ஓட்டை

அடுத்து கெடுப்பது ஆங்கில வைத்தியம்
நாம் கெடுத்து வைத்தது மூலிகை வைத்தியம்

படிக்க கூடாதது வேளாண்மை துறை செய்தி
படிக்க வேண்டும் ஒற்றை வைக்கோல் புரட்சி

பார்க்க கூடாதது பசுமை புரட்சியை
பார்க்க வேண்டும் பட்டினியில் லா வாழ்க்கை

தாய்ப்பால் விஷமே வேண்டாம்
தாய்ப்பால் வீரமே வேண்டும்

இயற்கை விவசாயம் செய்பவன் இரவில் தூங்குகிறான்
செயற்கை விவசாயம் செய்பவன் கனவில் ஏங்குகிறான்

விஷமில்லா உணவை உலகுக்கு கொடுப்போம்
நோயற்ற வாழ்க்கை வாழச்செய்வோம்

அய்யா நம்மாழ்வார் அவர்கள் விதைக்கப்பட்ட விதையாக இருக்கும் மண்ணா ஏகாம்பரம் அவர்கள் நான் உங்கள் பயணத்தின் வாயிலாக கற்றுக்கொள்ள எடுத்து கொண்டு உள்ள மரபு சார்ந்த அறிவு நுட்பங்கள் தொடர்ந்து செயலாற்றும் வேன் மேலும் அனைத்து தரப்பினரும் இணைந்து செயலாற்ற வேண்டிய தருணம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயலாற்ற அன்புடன் வேண்டுகிறேன் நண்பர்களே

மண்ணா ஏகாம்பரம்
நம்மாழ்வார் இயற்கை வேளாண் மையம் விட்டலாபுரம் கிராம் திண்டிவனம் வட்டம் விழுப்புரம் மாவட்டம்

9095974287–7200773224

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories