விடாத மழை , வீழ்ந்த நெற்பயிர், விண்ணை தொட்ட அறுவடை செலவு

விடாத மழை , வீழ்ந்த நெற்பயிர், விண்ணை தொட்ட அறுவடை செலவு

இரண்டு நாட்கள் முன்னர் நம் அறல் கழனி யில் நடவு செய்த ஆற்காடு கிச்சலி சம்பா நெல் வயலுக்கு சுத்தறப்பு அறுத்து விட்டோம்!!

அன்று நன்றாக மண் காய்ஞ்சி இருந்துச்சு!!

நாளை அறுவடை செஞ்சிடலாம் என்ற நிலையில்!! அன்றிறவு 1 மணி நேரம் கொட்டிய மழையில் குளம் போல தண்ணீர் தேங்கிடுச்சு!!

தண்ணீர் வடிய விட்டு இன்று அறுக்கலாம் பார்த்தா!!

விடியற்காலையில் தூரல்!!

வெயில் ஏறி 11 மணிக்குத்தான் வண்டி இறக்கினோம்!!

30 நிமிஷம் வண்டி ஓடல.. அதுக்குள்ள திரும்ப வானம் இருண்டு வருது!!

இல்லாத குல சாமிய வேண்டாத கொற தான்!!

2 மணி நேரம் சேத்த உழுது அறுவடை முடிய போற சமயத்துல தூற ஆரம்பிச்சது!!

வண்டி அறுத்து நெல் வண்டிய கொட்டற 1 நிமிசத்துல படபடபடனு மழை!! 3 நிமிசம் பெய்ஞ்ச மழை எங்க போச்சினு தெரியல..!

நல்ல வேளையா நெல்ல டிப்பர்ல கொட்டி வூட்டுக்கு கறை சேத்தியாச்சு!!

என்ன விசயம் னா..இந்த ஆற்காடு கிச்சலி தண்டு வடம் மெல்லிசா இருக்கு!! ஆத்தூர் கிச்சலி மாதிரி மோட்டாவா இல்ல..

20கி.மீ காத்துக்கே சாஞ்சிடுச்சு!!

ஒரு வழியா 1.2 ஏக்கர் அறுவடை செய்யறதுக்குள்ள நாக்கு தள்ளிடுச்சு!!

வைக்கோல் எல்லாம் சேடையடிச்ச மாதிரி இருக்கு..

அறுவடை செலவு ஏக்கருக்கு 5900 !!

போன வருசம் 3500 வந்தப்பவே முடியல.. இப்போ…

இதுல அரிசி 60 ரூபாய்க்கு தருவியா!! 65 தருவியான்னு .. பேரம் பேச ஆரம்பிச்சிட்டாங்க இப்போவே!!

விவசாயிங்க கிட்டதான்யா பேரம் பேசி வாங்குவீங்க நீங்கலாம்

ஆமா 1 ஏக்கர் தான் அறுத்திருக்கோம்!! இன்னும் 7 ஏக்கர் இருக்குல🙄😣😯

நம்ம கையில ஒன்னும் இல்ல.. எல்லாம் மேல இருக்கறவன் ( வான்மழை) பார்த்துபான்!!😥😥

இயற்கை வழியில் இயன்ற வேளாண்மை செய்வோம்

-உழவர் வ.சதிஸ்.,
அறல் கழனி,
கோட்டப்பூண்டி,
செஞ்சி,
8940462759

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories