வேளாண்மை செய்திகள்!

சேலம் மாவட்டத்தில் தற்போதைய சூழ்நிலையில் விவசாய பணிகள் பாதிக்காத வகையில் அரசின் வேளாண்மைத் துறை டாபே டிராக்டர் நிறுவனத்துடன் இணைந்து சிறு குறு விவசாயிகளுக்கு இலவச கோடை உழவு செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதாவது அடுத்த 60 நாட்களுக்கு ஒரு முறை விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஏக்கர் வரையில் கோடை உழவு செய்து கொடுக்கப்படும் எனவே சிறு குறு விவசாயிகள் உறவின் செயலில் மூலமாக அல்லது நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4200 100 எண்ணுக்கு தொடர்பு கொண்டு நிலவரங்களை முன்பதிவு செய்து கொண்டு பயன் பெறலாம் மேலும் விவசாயிகளுக்கு தேவையான விதைகள் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் அந்தந்த பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் தடையின்றி விவசாய பணிகளை மேற்கொள்ளவும் விவசாய விளைபொருள்களை தடையின்றி விநியோகம் செய்யவும் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அலுவலர்கள் அடங்கிய உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு உரிய தீர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் தொழில்நுட்ப ஆலோசனைகள் பொருள் தேவை மற்றும் பொருட்களை சந்தை படுத்துதல் இடர்பாடுகள் இந்த உதவி மையத்தை 04342 234 225 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்து உரிய ஆலோசனைகளை பெற்று பயன்பெறலாம் இந்த உதவி மையம் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து 32 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் திட்டம் துவங்கப்பட்டது வைகை அணை நீர்மட்டம் 67 அடி உயரம் போது 58 கால்வாய் மதகு வழியாக தண்ணீர் வெளியேறும் படிப்படியாக அமைக்கப்பட்டுள்ளது கடந்த இரண்டு ஆண்டுகளாக தென்மேற்கு வடகிழக்கு பருவமழை அணை நீர்மட்டம் 70 அடி உயரம் வரை உயர்ந்துள்ளது இதனைத் தொடர்ந்து நேரடியாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது தற்போது வைகை அணை நீர்மட்டம் 60 அடியாக உயர்ந்துள்ளது தொடர்ந்து உயர்வதால்வழியாக 58 கால்வாய் வழியாக நீர் திறக்கும் வாய்ப்பு இந்த ஆண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories