தேனீக்கள் வளர்ப்பு

 

தேனீ வளர்ப்பு முறையில் இருவகையான வளர்ப்பு முறைகள் உள்ளன. ஒன்று விவசாய ரீதியில் தேனீ வளர்ப்பு மற்றொன்று வியாபார ரீதியில் தேனீ வளர்ப்பதாகும்.

விவசாய ரீதியாக வளர்க்கும்போது இந்தியத் தேனீக்களை மட்டும்தான் வளர்க்க முடியும் .அயல் மகரந்த சேர்க்கைக்கு உகந்தவை. இந்த தேனீ பெட்டிகளை குறிப்பிட்ட இடைவெளியில் தோட்டத்தில் ஆங்காங்கு வைத்துவிட வேண்டும். இவற்றை இடம் மாற்றக்கூடாது. இம்முறையில் கிடைக்கும் தேனின் அளவு குறைவாக இருக்கும் .ஆனால் அயல் மகரந்தச் சேர்க்கை நன்றாக நடப்பதால் வயலில் உள்ள பயிர்களில் மகசூல் கூடும்.

வியாபார ரீதியில் அதாவது உற்பத்தியாக வளர்க்க இத்தாலிய தேனீக்கள் சிறந்தவை. இவற்றை அடிக்கடி இடம் மாற்றி வைத்து வளர்க்க வேண்டும். அதிக அளவில் உண்ணக்கூடியவை பூக்கள் அதிகமாக இருக்கும். இடங்களில்தான் இவை வாழும்.

தேனீக்களின் வகைகள்

மலைத்தேன் இதையே சிறந்த தேன் சேகரிக்கும் போது சராசரியாக ஒரு காலனி 50 முதல் 80 கிலோ தேன் கிடைக்கும்.
சிறு தேனி இவை ஒரு காலனியில் 200 முதல் 900 கிராம் தேனை சேகரிக்கும்.

இந்தியத் தேனீ இவை சராசரியாக தேன் சேகரிக்கும் வகை .ஒரு வருடத்தில் தல ஒரு காலணியில் 6 முதல் 8 கிலோ தேனை சேகரிக்கும்.

ஐரோப்பா தேனி கேரளாவில் காணப்படும். தேனீக்களுக்கு கொடுக்குகள் சரியான முறையில் வளர்ந்து இருக்காது. மகரந்த சேர்க்கையில் அதிக திறன் கொண்டவைகள். இவைகள் ஒரு வருடத்திற்கு 300 முதல் 400 கிராம் தேனை சேகரிக்கும் தன்மை கொண்டவை.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories