தேனீ வளர்ப்பிற்கு அரசு மானியம் வழங்குகிறதா?

தேனீ வளர்ப்பிற்கு அரசு மானியம் வழங்குகிறதா?

தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு தேனீ பெட்டிகளை தேனீக்கள் வளர்ப்பு மற்றும் தேன் பிரித்தெடுக்கும் கருவி வாங்க என தேனீ வளர்ப்பில் 40% வரை அரசு மானியம் வழங்குகிறது.

மேலும் மானியம் குறித்த விவரங்களை பற்றி இங்கு காணலாம்.

ஒரு ஏக்கருக்கு எவ்வளவு கறிவேப்பிலையை நாற்றுகளை உற்பத்தி செய்ய வேண்டும். நாற்றுகளை நடுவதற்கு ஏற்ற நிலை என்ன?

8000 பாலத்தின் கைகளில் வளர்க்கப்பட்ட கருவேப்பிலை நாற்றுகளை ஒரு ஏக்கருக்கு தேவைப்படும். விதை ஊன்றப்பட்ட பைகளின் வைக்கோல் பரப்பி 15 நாட்கள் வரை மூடி வைக்க வேண்டும்.

15 நாட்கள் கழித்து வைக்கோலை எடுத்து விட வேண்டும். இந்த நிலையில் அரை அடி உயரத்திற்கு நாற்று வளர்ந்திருக்கும் .இதுவே நாற்று நடுவதற்கான பக்குவம் ஆகும்.

பூச்சி விரட்டிகளை எப்படி தெளிக்க வேண்டும் ?எவ்வளவு தெளிக்கவேண்டும்? எப்பொழுது தெளிக்கலாம்?

பூச்சி விரட்டிகளை தெளிப்பான் ,விசைத் தெளிப்பான் மூலம் தெளிக்கும்போது ஒரு நாளைக்கு அதிகபட்சம் 10 டேங்க் மட்டுமே தெளிக்க வேண்டும். கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க ம்போது அதிகபட்சமாக 16 டேங்க் மட்டுமே தெளிக்க வேண்டும்.

பூச்சிவிரட்டிகளை காலை 10:00 மணிக்குள்ளும் மாலை 4 மணிக்கு பிறகும் தெளிக்க வேண்டும்.

விவசாயத்தில் மாற்று பயிர்களை பயிர் செய்ய காரணம் என்ன?

தொடர்ந்து ஒரே பயிரை சாகுபடி செய்யாமல் மாற்றுப் பயிர்களை விளைவிக்கும் போது மாற்றுப் பயிர்களுக்கு முந்தைய பயிரின் கழிவுகள் எருவாக பயன்படுவதோடு முந்தய பயிர்களில் தங்கி வாழ்ந்த நோய்க்கிருமிகள் புது பயிரை தாக்குவதில்லை.

குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னர் வேறு ஒரு பயிர் சாகுபடி செய்த பிறகு மீண்டும் பழைய பயிர் சாகுபடி செய்வதால் அந்த பயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

மாடுகளில் அதிகம் பால் தரக்கூடிய இனங்களின் எப்படி அறிவது?

மாடுகளில் அதிகம் பால் தரக்கூடிய இனங்கள் கவர்ச்சியான தோற்றத்துடன் திடமாகவும், அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து அனைவரையு ம் கவரும் வகையில் இருக்கும்.

கூர்மையான கண்கள், மெலிந்த கழுத்தை பெற்றிருக்கும். மடி வயிற்றுடன் நன்கு இணைந்து இருக்கும். மடியில் உள்ள நான்கு காம்புகளும் நன்கு பிரிந்து இருக்கும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories