தேனீ காலனிகளை அமைக்க இயற்கையான கூண்டில் உள்ள தேனீக்களை மாற்றுவது அல்லது வழி செல்லும் தேனீக்களை கவர செய்ய வேண்டும்.
ராணித் தேனீயை பிடித்து கூண்டில் வைத்தால் இது ஏனைய தேனீகளை கவர்ந்து இழுக்கும்.
பெட்டிகளை பழைய கூண்டின் உதிரிகளை கொண்டோ அல்லது தேனீ மெழுகினை கொண்டோ தடவினால் தேனீ பழக்கப்பட்ட வாசனை உடையதாக அமைக்கப்படும்.
சில வாரங்கள் பாதி கப் சுடுநீரில் பாதி கப் சர்க்கரை கலந்து தேனீக்களுக்கு உணவு அளிப்பதன் மூலமாக பெட்டியில் வேகமாக கூடு கட்ட முடியும்.
பாதுகாப்பு முறைகள்
பெட்டிகலை நன்கு செழிப்பான இடத்தில் வைக்க வேண்டும். பெட்டிகளை இடமாற்றம் விரும்பினால் இரவு நேரத்தில் மட்டுமே மாற்ற வேண்டும்.
எ ரும்பு மற்றும் மற்ற விலங்குகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும்.
தினமும் தேன் பெட்டியை கண்காணிக்கவேண்டும். அறுவடையை சரியான சமயம் அறிந்து செய்ய வேண்டும்.