அக்னி அஸ்திரம் பயன்கள்

அக்னி அஸ்திரம்
பயன்கள்
1. பூச்சிகொல்லியாக பயன்படுகிறது.
2. நன்மை செய்யும் பூச்சிகள் வளரும்.
3. தீமை செய்யும் பூச்சிகளுக்கு ஒவ்வா தன்மையை உண்டு
பண்ணி பூச்சிகள் பயிர்களை தாக்காமல் வெளியே
செல்லும்.
4. இரசாயன மருந்து தெளித்தால் நன்மை செய்யும்
பூச்சிகளும் சேர்ந்து இறந்துவிடும்.
5. இயற்கை மருந்து தெளித்தால் பயிர்களின் வளர்ச்சி
பாதிக்காது.மகசூல் அதிகமாக இருக்கும். நன்மை
செய்யும் பூச்சிகள் சாகாது
தேவையான பொருட்கள்
1. வேப்ப இலை – 4 கிலோ
2. வெள்ளைப்பூண்டு – 2 கிலோ
3. பச்சைமிளகாய் – 2 கிலோ
4. புகையிலை – 1 கிலோ
5. மாட்டுக்கோமியம் – 30 லிட்டர்
6. பாத்திரம் – 50 லிட்டர் கொள்ளளவு
தயாரிக்கும் முறை
முதல்படி
50 லிட்டர் கொள்ளளவு கொண்ட பாத்திரத்தில் மாட்டுக்கோமியம் 30 லிட்டர், புகையிலை 1 கிலோ, பச்சைமிளகாய் 2 கிலோ, வெள்ளைப்பூண்டு 2 கிலோ, வேப்ப இலை 4 கிலோ அனைத்தையும் சேர்த்து 1 மணி நேரம் கொதிக்க விட வேண்டும்.
இரண்டாம் படி
அதனை இறக்கி ஆற விட வேண்டும்.பின்பு வடிகட்டி வைத்துக்கொண்டு பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் பயிர்கள்
அனைத்துவகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்
பயன்படுத்தும் அளவு
1 லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி என்ற விகித்தில் கலந்து பயிர்களுக்கு மாலை வேளையில் தெளிக்கலாம்.
காய்ப்புழு தாக்கக்கூடிய அனைத்து பயிர்களுக்கும் தெளிக்கலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories