அங்கக வேளாண்மையில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு (IPM)

அங்கக வேளாண்மையில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு (IPM)
பூச்சி, நோய்கள் பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் அளவிற்கு பெருகவிடாமல்; பூச்சிகளின் நடமாட்டத்தை கண்டறிந்து தேவைக்கேற்ப சிறந்த பூச்சி கட்டுப்பாடு முறைகளைக் கையாண்டு பொருளாதார சேத நிலைக்கு உள்ளாகாமலும் சுற்றுப்புற சூழ்நிலை பாதிப்பு அடையாமலும் எளிய முறையில் அதிக செலவில்லாமல் கட்டுப்படுத்தி உற்பத்திகளை பெருக்குவதேயாகும்.
சிறந்த முறையில் நிலத்தேர்வு செய்வதிலிருந்து பயிர் அறுவடை செய்வது வரை மேற்கொள்ளும் தொழில் நுட்பங்களில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. உழவியல் முறைகள் கைவினை முறைகள் உயிரியல் பூச்சிகள், நோய்கள் களையை கட்டுப்படுத்துவது வரை முக்கிய அங்கம் வகிக்கின்றன.
இயற்கை முறையில் விவசாயம் செய்ய இரகங்களை தேர்ந்தெடுத்தல் சரியான இடைவெளி, அளவான நீர்பாசனம் போன்ற சாகுபடி முறைகளையும் பாதிக்கப்பட்ட செடிகளையும், பூ, மொட்டு, காய்களை முட்டை குவியல் சிறு புழுக்களை மற்றும் வளர்ந்த புழுக்களை பிடித்து அழித்தல்.
இனக்கவர்ச்சி பொறி வைத்து தாய் அந்து பூச்சிகளை கவர்ந்து அழித்தல் இயற்கை எதிரிகளான ஊன் உண்ணிகள், ஒட்டுண்ணிகள் வளர்ச்சியை ஊக்கப்படுத்தியும் வைரஸ் கிருமிகள் மற்றும் பாக்டீரியா கரைசல்கள் தெளித்தும் வேம்பு நொச்சி புங்;கம் போன்ற தாவரவியல் பூச்சி கொல்லிகள் தெளித்தல் போன்ற முறைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்குமேற்பட்ட முறைகளை கடைப்பிடித்து பூச்சி,பூஞ்சாண நோய்களை கட்டுப்படுத்துவதுதான் ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு முறையாகும்.
சரியான நேரத்தில் ஒருங்கினைந்த பயிர் பாதுகாப்பு முறையினை தக்க பருவத்தில் பயன்படுத்தினால் பயிர்களில் ஏற்படும் அரும்பு, பூ பிஞ்சுகள் உதிர்வதை தடுக்கலாம்
மாவுப் பொருள் புரதப் பொருள் காய்களுக்கு கிட்டாமை
சூரியஒளி கீழே உள்ள இலைகளுக்கு ஊடுருவிச் சென்று நல்ல முறையில் மாவுப்பொருள் உற்பத்தி செய்ய இயலும் வகையிலும் நல்ல காற்றோட்டம் கிடைக்கும் வகையிலும் செடிகளுக்குத் தகுந்த இடைவெளி விடவேண்டும்.
மேலும் தேவையான அளவில் மட்டும் உரங்களை தகுந்த நேரத்தில் பயிர்களுக்கு அளிப்பதால் பயிரின் வளர்ச்சி நன்கு வளர்ந்து பயிர் தன்னுடைய உணவைச் செடிகள் தயாரிக்க ஏதுவாகும்
பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சி அவற்றின் எண்ணிக்கை மற்றும் தாக்குதலின் தீவிரத்தை கணித்து தக்க பயிர் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். நமது சுளபயளநநன- கன்னிவாடி பகுதி விவசாயிகளுக்கு உழவர்கள் பள்ளிகளில் அனைத்து விபரங்களும் வயல்வெளியில் பயிற்சி வகுப்புகள் மூலம் கற்றுக் கொடுக்கப்படுறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories