விவசாயத்திற்கு தேவையான கவர்ச்சிப்பொறி , விளக்குப் பொறிகளை மானியத்தில் பெறலாம்?
தோட்டக்கலை துறை ,தேசிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விவசாயத்திற்கு தேவையான பொறிகளை பெற மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் மானியம் பெற பொறிகள் வாங்கியதற்கான ரசீது, நிலத்தின் சிட்டா, வங்கி கணக்குநகல் ,ஒரு போட்டோ ஆகியவற்றின் அருகில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மல்லிகையில் நூற்புழு தாக்கத்தினை எப்படி அறியலாம் ?அதன் அறிகுறி என்ன?
நூற்புழு தாக்குதலை கண்டறிய மண் மாதிரிகளை எடுத்து கண்காணிக்க வேண்டும். நூற்புழு தாக்கப்பட்ட செடிகளின் இலைகள் வெளிறிய இளம் மஞ்சள் நிறமாகி பின்னர் கருகிவிடும்.
நூற்புழு தென்பட்டாலும் ஒவ்வொருசெடிகளின் தூருக்கு அருகிலும் சிறிய குழி எடுத்து கைப்பிடியளவும் நன்கு இடித்து வேப்பங்கொட்டை இட்டு மூடிவிடவேண்டும்.
முட்டை எலுமிச்சை கரைசலின் பயன் என்ன?
முட்டை எலுமிச்சை கரைசல் வளர்ச்சி ஊக்கியாகும். இந்தக் கரைசலை அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
நுண்ணூட்டச்சத்து குறைபாட்டினால் பயிர்கள் வெளுத்து காணப்படும். அப்பொழுது இந்த கரைசல் 10 லிட்டர் நீருக்கு 200 மில்லி என்ற அளவில் கலந்து பயன்படுத்த வேண்டும்.
அசோலா வளர்ப்பிற்கு பயன்படுத்தும் பொருட்களை எப்பொழுது மாற்ற வேண்டும்?
அசோலா வளர்ப்பு பயன்படுத்தும் தொட்டியில் மாதம் ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு மண்ணை மாற்றி புதிய மண்ணை இடவேண்டும்.
பத்து நாட்கள் ஒரு முறை முறையேனும் முறை மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை மாற்றி புதிய தண்ணீரை ஊற்ற வேண்டும்
அசோலாவை தவிர ஆறு மாதத்துக்கு ஒரு முறை அனைத்து இடுபொருட்களையும் வெளியேற்றிய பிறகு புதிதாக இடுபொருட்களை இட வேண்டும்.
கருவூட்டல் செய்தால் மாடுகளுக்கு பால் குறையுமா?
கறவை மாடுகளுக்கு இயற்கையாகவே கன்று ஈன்று இரண்டு மாதங்கள் பாலின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்லும் பிறகு ஒரு மாதம் பாலின் அளவு மாறாமல் இருந்ததுவிட்டு மூன்று மாதத்திற்கு மேல் குறைய பால்ஆரம்பிக்கும்.
மேலும் கறவை மாடுகளுக்கு கருவூட்டல் செய்வதாலும் , செய்யாவிட்டாலும் இயற்கையாகவே இந்த நிகழ்வு ஏற்படும். எனவே 3மாதத்தில் சினை பிடிக்கும்போது, சினை பிடித்தால்தான் பால் குறைகிறது என நினைக்கத் தேவையில்லை.