அதிக புழுத் தாக்கம் உள்ள கத்தரிக்காய் வளர்ப்புக்கு எளிமையான இயற்கை வழித் தீர்வு:
கத்திரிக்காய் புழுவுக்கு கருவேல மரப்பட்டை- கருவேல மரபட்டையை 10 லிட் கோமியத்தில் 5 நாட்கள் ஊறவைத்து தெளித்தால் புழுக்கள் தொல்லையிலிருந்து விடுபடலாம்
குளம்,ஏரிகளில் காணப்படும் நாட்டு கருவேல மர பட்டையை சுமார் ஒரு கிலோ அளவுக்கு சிறிது சிறிதாக நறுக்கி
10 லிட் கோமியத்தில் 5 நாட்கள் ஊறவைக்க வேண்டும். பின் அடுத்த நாள் வடிகட்டி தெளிப்பானில் 10 டேங்கில் 9.5 லிட் நீருடன் அரை லிட்டர் இக் கரைசலைக் கலந்து மாலை வேளையில் தெளிக்கலாம். 15 நாட்களுக்கொருமுறை தெளித்தால் அனைத்து வகை பூச்சிகள்,புழுக்கள் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
அனைத்து பயிர்களுக்கும் 15 நாட்களுக்கொரு முறைத் தெளிக்கலாம்.