அற்புதமான புதிய விவசாய தொழில்நுட்பம் : தென்னை விவசாயம்!

இந்தியா போன்ற வெப்ப மண்டல நிலப்பரப்புகளில் அதிகளவில் வளர்கிறது தென்னை மரம். தென்னையின் அனைத்து பகுதிகளும் பயன்மிக்கவை. தென்னங்குலை முதல் தண்டு, கொப்பரை, எழனி ஆகியவற்றிக்கு சந்தையில் நல்ல வரவேற்பும் மதிப்பும் உண்டு. தேங்காய், மற்றும் தேங்காய் எண்ணெய் தென்னிந்திய சமையலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது மற்றும்

பொதுவாக தென்னை மரம் 30 மீ வரை வளரக் கூடியது. இதற்கு கிளைகள் கிடையாது. இதன் உச்சியில் இருக்கும் தென்னோலை 4-6 மீ நீளமுடையது. மணற்பாங்கான நிலத்தில் வளரவல்ல தென்னை, உப்புநீரைத் தாங்கி வளரக் கூடியது. நல்ல மழையும் சூரியஒளியும் கிடைக்கும் இடங்களில் இது நன்கு வளரும் எனவே,

தென்னை இரகங்கள்
நெட்டை இரகம்

குட்டை இரகம்

கலப்பின இரகம்

நெட்டை இரகம்
மேற்கு கடற்கரை நெட்டை மற்றும் கிழக்கு கடற்கரை நெட்டை ஆகிய இரகங்கள் பரவலாக வளர்க்கப்படும் நெட்டை இரகங்கள் ஆகும்.

பண்புகள்
நீண்ட வாழ்திறன் கொண்டது. இதன் வயது 80-90 வருடங்கள் ஆகும்.

பல்வேறு மண் வகைகளில் வளரும் தன்மை கொண்டது. அவை முறையே மணல், சிவப்பு வண்டல் மண் மற்றும் செம்பொறை மண்ணிலும் வளரும்.

கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரம் வரை உள்ள அனைத்து பகுதிகளிலும் வளரும். இது நோய் மற்றும் பூச்சிகளை எதிர்த்து வளரும் தன்மை கொண்டது.

இந்த மரங்கள் 15 மீ முதல் 18 மீ வரை (அ) அதற்கும் அதிகமான உயரம் வரை வளரும் தன்மையுடையவை.

நடவு செய்த நாளிலிருந்து 8 முதல் 10 வருடங்களில் பூத்து, காய்க்க ஆரம்பிக்கும்.

காய்கள் நடுத்தரம் முதல் பெரிய அளவில், கோள வடிவ (பந்து போன்ற) அல்லது நீள வடிவில், பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் பழுப்பு நிறம் கலந்து காணப்படும்.

6000 தென்னங்காயிலிருந்து ஒரு டன் கொப்பரைத் தேங்காய் பெறப்படுகிறது.

நெட்டை இரகங்களின் பட்டியல்…
மேற்கு கடற்கரை நெட்டை

கிழக்கு கடலோர நெட்டை

சந்திரகல்பா (அ) இலட்சதீவு சாதா (இலட்சதீவு சாதா நெட்டை)

பிலிப்பைன்ஸ் சாதா (கேர சந்திரா)

வேப்பங்குளம்.3 (அந்தமான் சாதா)

ஆழியார் நகர்-1

தீப்தூர் நெட்டை

கேரசந்திரா (பிலிப்பைன்ஸ் அர்டினரி)

தமிழ்நாட்டிற்கு உகந்த இரகங்கள் : மேற்கு கடற்கரை நெட்டை, சந்திரகல்பா (அ) இலட்சத்தீவு சாதா (இசநே), வேப்பங்குளம்.3 (அந்தமான் சாதா), கிழக்கு கடலோர குட்டை, ஆழியார் நகர்-1, கேரசந்திரா (பிலிப்பைன்ஸ் சாதா).

குட்டை இரகம்
பண்புகள்:
குட்டை இரகம் குள்ளமாக (5-7 அடி வரை) இருக்கும். நெட்டை இரகத்தை விட முன்னதாகவே பூத்து காய்க்க ஆரம்பித்துவிடும்.

குட்டை தென்னை மரங்கள், நடவு செய்த நாளிலிருந்து 3ம் ஆண்டிலேயே பூக்க ஆரம்பித்துவிடும். 9வது ஆண்டிலிருந்து காய்க்க ஆரம்பித்துவிடும்.

குட்டை (அ) குறுகிய கால இரகங்கள் பச்சை, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறக் காய்களைக் கொடுக்கும்.

வறட்சியால் பாதிக்கப்படும்

காய்கள் அளவில் சிறியதாகவும் முட்டை (அ) வட்ட வடிவில் காணப்படும்.

குட்டை இரகங்களின் பட்டியல்
சவ்காட் ஆரஞ்சு குட்டை

சவ்காட் பச்சைக்கட்டை

தமிழ்நாட்டிற்கு உகந்த இரகங்கள் : சவ்காட் ஆரஞ்சு குட்டை, சவ்காட் பச்சைக்குட்டை

கலப்பினங்கள் (ஹைபிரிட்)
கலப்பினம் என்பது புறத்தோற்ற பண்புகளில் மாறுபட்ட நெட்டை குணத்தையும், கட்டை இனத்தையும் சேர்ந்து உருவாக்கப்படுபவை. தாய் மரங்களை விட இவ்வாறு இரு இரகங்களின் கலப்பினச் சேர்க்கையில் உருவாகும் மரங்களில் பூக்கள் விரைவில் பூக்க ஆரம்பித்துவிடும். மகசூல் அதிக அளவில் இருக்கும் அதோடு, நல்ல தரமான கொப்பரைத் தேங்காயும், எண்ணையும் கிடைக்கும்.

பண்புகள்:
கலப்பினம் என்பது நெட்டை மற்றும் குட்டை இனங்களை சேர்த்து உருவாக்கப்படும் தென்னையாகும்.
தாய் மரங்களைவிட, அதிக மகசூல் கொடுக்கும், விரைவில் பூக்க ஆரம்பித்துவிடும். அதோடு, நல்ல கொப்பரைத் தேங்காயும், எண்ணையும் கொடுக்கம் இதில்

கலப்பினங்கள் இரண்டு முறையில் உருவாக்கப்படுகிறது. நெட்டையை பெண்தாய் மரமாகவும், குட்டையை ஆண்தாய் மரமாகவும் (நெட்டை குட்டை) சேர்த்து உருவாக்குதல் (அ) குட்டையை பெண் தாய் மரமாகவும், நெட்டையை ஆண் தாய் மரமாகவும் (குட்டை நெட்டை) கொண்டு கலப்பினங்கள் உருவாக்குதல் ஆகும்.
மேலும் நெட்டை நெட்டை, குட்டை குட்டை என்ற முறையிலும் கலப்பினங்கள் உருவாக்கப்படுகின்றன என்றார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories