அவல் , பொறி தயாரிக்க உதவும் நெல் ரகம் எது?

 

 

நெற்பயிரில் M டி U 6 என்ற ரகம் பச்சரிசி பொங்கல் அவல் மற்றும் பொறி தயாரிக்க மிகவும் ஏற்றதாகும்.

இந்த ரகம் 110 முதல் 115 நாட்களில் சராசரி மகசூல் ஒரு எக்டருக்கு 6 ஆயிரத்து 118 கிலோ தரவல்லது.

இலை சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான் பச்சை தத்துப்பூச்சி மற்றும் வெண் முதுகு பூச்சி ஆகியவற்றிர்கு மிதமான எதிர்ப்புத்திறன் உடையது.

மாடு கன்று ஈன்ற மாலையில் சீம்பால் நன்றாக கறந்தது காலையில் சிவப்பு நிறத்தில் கரைந்தது என்ன காரணம்?

பொதுவாக பால் கறக்கும்போது எல்லா விரல்களையும் காம்பை பிடித்து உள்ளங்கையில் அழுத்தி பால் கறக்க வேண்டும்.

இந்த மாதிரி கறந்தால் கன்று சுவைப்பது போல தோன்றும் அழுத்தம் காம்பின் எல்லா பகுதிகளிலும் ஒரே அளவாக ஏற்படும்.

இதனால் பால்கிண்ணத்தில் காயமோ ரத்தக்கசிவு ஏற்படாது. பெருவிரலை மடித்து அழுத்தி பால் கறக்க கூடாது.

பெருவிரல் கொடுக்கும் அழுத்தம் காம்பு கிண்ணத்தைகாயப்படுத்தி விடும்.

இதனால் மயிரிழை போன்றவை ரத்த குழாய்கள் வெடிப்பதால் ரத்த கசிவுஏற்படும் . இதனால் ரோஸ் நிறத்தில் பால் வெளிப்படும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories