அவுரி செடியின் சிறப்பு அம்சங்கள்

திண்டிவனம்:திண்டிவனம் பகுதியில் அவுரி செடி பயிர் செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டிவருகின்
றனர். திண்டிவனம் அடுத்த கிளியனூர், கொங்கரப்பட்டு, உப்புவேலூர், முருக்கேரி, வடநெற்குணம், ஆலங்குப்பம், பிரம்மதேசம் உள்பட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் தர்பூசணி, மணிலா, நெல், கேழ்வரகு, கம்பு பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வந்தனர்.வெயில் மற்றும் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டதால் சில மாதங்களாக விவசாயிகள் பயிர் செய்ய அதிக ஆர்வம் காட்டவில்லை.
தற்போது பல விவசாயிகள் அவுரி செடி பயிர் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அவுரி செடி பயிர் செய்தால் உரம், பூச்சிகொல்லி மருந்து தேவையில்லை.
தண்ணீர் அதிகளவில் தேவையில்லை.இதனால் குறைந்தளவே செலவு ஆகிறது.
கோடைக்காலங்களில் கிணற்று பாசனத்தில் கிடைக்கும் குறைந்த நீரால் வேறு எந்த பயிர்களும் செய்ய முடியவில்லை. இதனால் விவசாயிகளுக்கு அவுரி செடி பயிர் செய்வது லாபமாக உள்ளது.
அவுரி செடி பயிர் ஒரு முறை செய்தால் போதும்.
முதல் அறுவடை 90 நாளிலும் இரண்டாவது அறுவடை 50 நாள் என ஐந்து முறை அறுவடை செய்யலாம்.
ஒரு ஏக்கருக்கு சுமார் 50 ஆயிரம் வரை லாபம் பெறலாம் என்றார் .
மாடுகள் மேயாது
கூலி ஆட்கள் தேவையில்லை
15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதும்.
மாடு, ஆடுகள் மேய்வதில்லை.
இதில் காய்ப்பு திறன் இல்லை, அறுவடைக்கு என நாள் இல்லை.
தழை வளர்ந்தால் அறுவடை செய்யலாம். வேறு எந்த பயிரிலும் இந்த அளவுக்கு லாபம் கிடைக்காது என விவசாயிகள் கூறுகின்றனர்.
கிராக்கி

ஜப்பான், ஜெர்மனி, ரஷ்யா ஆகிய வெளிநாடுகளில் நல்ல கிராக்கியுள்ளதால் வியாபாரிகள் விவசாய நிலத்திற்கே வந்து வாகனங்களில் ஏற்றிச் செல்கின்றனர்.
இதனால் விவசாயிகளுக்கு போக்குவரத்து செலவும் இல்லை. இதனால் இப்பகுதி விவசாயிகள் அவுரி செடி பயிரிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றார் .
வியாபாரி பத்மநாபன் கூறியதாவது:

அவுரி செடியில் உள்ள தழைக்கு வெளிநாடுகளில் அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இந்த தழையை மருந்து தயாரிக்க பயன்படுத்துகின்றனர்.
ஒரு டன் அவுரி தழை ரூபாய் 50 ஆயிரத்திற்கு விற்கலாம்.
இதை பயிர் செய்வதால் விவசாயிகளுக்கு அதிக செலவு இல்லை.
பயிர் செய்ய முடியாத நிலங்கள் மற்றும் தென்னை மரம், மாமரம், கொய்யா மரங்களோடு ஊடு பயிராக செய்யலாம்.
இதனால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்றார் .

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories