ஆடிப்பட்டத்தில் எந்தெந்த நோய்கள் தாக்கும் மற்றும் பயிர்களைப் பாதுகாப்பது எப்படி?

ஆடிப்பட்டத்தில் பயிர்களானது தென்மேற்கு பருவமழைக் காலங்களில் விதைப்பு செய்யப்படுகின்றன. இவ்வாறு சாகுபடி செய்யப்படுகின்ற பயிர்களில் பல்வேறு வகையான நோய்கள் தோன்ற வாய்ப்பு உள்ளது.
அவ்வாறு தோன்றும் நோய்களைக் கட்டுப்படுத்தி விளைச்சலை அதிகரிக்கக் கீழ்க்கண்ட வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

பூஞ்சாணங்கள் அழிப்பு (Destruction of fungi)
கோடைக்காலத்தில் நிலத்தை உழவு செய்து தரிசாக போடும் பொழுது கோடையில் நிலவும் அதிக வெப்பத்தினால் வாடல்.

வேரழுகல் மற்றும் தண்டழுகல் நோய்க்காரணிகளான பியூசேரியம், ரைசக்டோனியா, ஸ்கிளிரோசியம் ஆகிய பூஞ்சாணங்கள் அழிக்கப்படுகின்றன என்றார்.

டிரைக்கோடெர்மா விரிடி (Trichoderma viridi)
உயிரியல் முறையில் பருத்தி, பயறுவகைகள், எண்ணெய் வித்துப்பயிர்கள், காய்கறிகள், மலர்கள் மற்றும் பழப்பபயிர்கள், ஆகியவற்றில் நோய்களைக் கட்டுப்படுத்த உயிரியல் பூஞ்சாணக் கொல்லிகளான டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் /1 கிலோ விதை என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்கும்போது விதைமூலம் பரவும் அனைத்து நோய்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன.

எப்படிப் பயன்படுத்துவது? (How to use?)
மண்ணில் எக்டருக்கு 2.5 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி 50 கிலோ மக்கிய உரத்துடன் கலந்து 10-15 நாட்கள் நிழலில் வைத்திருந்து இடுவதின் மூலம் வேரழுகலையும், வாடல் நோய்களையும் கட்டுப்படுத்தலாம் எனவே

வேப்பம் புண்ணாக்கு (Boil the neem)
வேப்பம் புண்ணாக்கு எக்டருக்கு 250 கிலோ இடும்போது மண்ணில் தோன்றும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன மற்றும்

வேதியியல் முறை(Chemical method)
வேதியியல் முறையில் கார்பன்டசிம் விதைக்கலாம். 1 லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து பாதிக்கப்பட்ட செடிகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள செடிகளின் தூர்களில் ஊற்றி, வாடல் மற்றும் வேரழுகலைக் கட்டுப்படுத்தலாம்.

மேன்கோசெப் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு 0.2 சதவிகிதம் (லிட்டருக்கு 2 கிராம்) தெளித்து இலை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

விதைநேர்த்தி
ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் 1 லிட்டர் தண்ணீருக்கு 0.5 கிராம் அல்லது காப்பர் மருந்தை ஒருகிலோ விதைக்கு 2கிராம் என்ற அளவில் கலந்து விதைநேர்த்தி செய்வது நல்லது.

மேலும் கார்பன்டசிம் பெவிஸ்டின் மருந்தைப் பயன்படுத்துவதன் மூலம் வாடல் மற்றும் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

மேன்கோசெப் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு 0.2 சதவிகிதம் (லிட்டருக்கு 2 கிராம்) தெளித்து இலை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் 1 லிட்டர் தண்ணீருக்கு 0.5 கிராம் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு 1 லிட்டர் தண்ணீருக்கு 2.5 கிராம் மருந்தை கலந்து தெளிப்பதின் மூலம் பாக்டீரியாவால் தோன்றும் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

நோயுற்ற இலைகள் (Diseased leaves)
அவ்வப்போது வயலைப் பார்வையிட்டு நோயுற்ற செடிகளை பிடுங்கி எரித்து விடவேண்டும்.

நோயுற்ற நாற்றுக்களை நடுவதற்கு பயன் படுத்தக்கூடாது என்றார்.

ஊட்டச்சத்து (Nutrition)
அளவான தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் அதிகமான சாம்பல்சத்து அளிப்பதன் மூலம் நோய் தாக்கத்தைக் குறைக்கலாம்.
ஆகவே வேளாண் விவசாயிகள் மேற்கூறிய தொழில் நுட்ப ஆலோசனைகளைப் பயன்படுத்தி நோயின் தீவிரத்தைக் குறைத்து அதிக விளைச்சலைப் பெருக்கிக்கொள்ளலாம் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories