ஆட்டு உரத்தின் பயன்கள்
ஆட்டு எரு அதே வருடம் மாட்டு எரு மறுவருடம் என்ற பழமொழிக்கு ஏற்ப விவசாயத்தில் நாம சாகுபடி செய்யும் பொழுதே வயலில் பயிரை அறுவடை செய்தபிறகு ஆட்டுக் கிடை நிறுத்தி விவசாயம் செய்வார்கள் அப்படி செய்யும் பொழுது களைகள் சற்று கூடுதலாக வளரும் ஆனால் தழைச்சத்து அதிகரிக்கும் ஏனென்றால் அவை வயலிலேயே ஆட்டை அடைத்து வைப்பதால் சிறுநீர் மூலம் நமக்கு தழைச்சத்து அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது.
மேலும் அவை கிருமி நாசினியாகவும் உள்ளது கெட்ட பூஞ்சாணங்களை வளரவிடாது தடுத்து விடும் வீட்டில் வளர்க்கும் ஆட்டில் வெறும் எருவை மட்டும்தான் எடுத்து குப்பை போட்டு வைப்பார்கள் அவை மக்கி இருக்கும் மக்கிய எருவை வயலிலேயே எடுத்து போடும் போது களைகள் அதிகம்
வளராது. ஆனாலும் வயலில் ஆட்டுக் கிடை வைப்பது மிகச் சிறந்தது ஆகும். ஆட்டு கிடை வைத்து நான்கு அல்லது ஐந்து முறை நன்றாக நிழத்தை உழவு செய்து அதன்பிறகு பார் பிடித்து நாம விவசாயம் செய்யலாம் களைகள் அதிகம் வர வாய்ப்பில்லை.
ஆட்டு எரு வயலில் உரமாக நாம போடும் பொழுது மற்ற எருவில் உள்ள சத்துகளை விட கூடதலாகவே ஊட்டச்சத்து பயிருக்கு கிடைக்கிறது ஆட்டு எருவில் மூன்று சதவீதம் தழைச்சத்தும், மணிச்சத்து ஒரு சதவீதமும் சாம்பல் சத்து 2 சதவீதமும் உள்ளது வீட்டில் வளர்க்கும் ஆடுகளின் சாணத்தை குழி வெட்டி அவற்றில் எடுத்து போட்டு வைக்க வேண்டும் ஆவியாகாமல் ஈருக்கும் சத்து விரியமாகாது
விவசாயத்தில் மக்கிய தொழுவுரம் அதாவது மாட்டுச் சாணத்தை மக்கவைத்து போடும் பொழுது அவை நமக்கு கிடைக்க இந்த வருடம் போட்டால் அடுத்தவருடம்தான் மகசூல் கொடுக்கும் என்பார்கள் அகவே மாட்டு எருவை மண்புழு எருவாக மாற்றி அவற்றில் உயிர் உரங்கள் கலந்து மக்கவைத்து அதன்பிறகு மதிப்புக் கூட்டிபிறகு போடலாம்.