ஆமணக்கு சாகுபடி தொழில்நுட்பம்

ஆமணக்கு சாகுபடி தொழில்நுட்பம்
ரகம் : பச்சை மற்றும் வீரிய ஒட்டு ரகங்கள்
பட்டம் : ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம்
விதையளவு : 3 கிலோ / ஏக்கர்
பூஞ்சாணவிதை நேர்த்தி
1 கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து வைக்கவும்
உயிர்உரவிதை நேர்த்தி
200 கிராம் அசேஸ்பைரில்லம், 200 கிராம் பாஸ்போ பாக்டீரியா இரண்;டையும் கலந்து விதைநேர்த்தி செய்யலாம்.
நிலம் தயாரித்தல்
ஏர்க்கழப்பையாக இருந்தால் 4 உழவுகள், டிராக்டராக இருந்தால் 5 உழவகள் போட வேண்டும்.
அடியுரம்
17: 17: 17 / ஏக்கர்
தொழுவுரம் :
ஒரு ஏக்கருக்கு மக்கிய தொழுவுரம் 4 டன் நன்றாக் போடவேண்டும்
நுண்ணூட்டம்
எண்ணெய் வித்து நுண்ணுரம் 2 கிலோ வை 20 கிலோ மணலுடன் கலந்து விதை நடவு செய்த 15 நாட்களுக்குள் வயலில் ஈரம் இருக்கும் பொழுது தூவி விட வேண்டும்.
விதைப்பு முறை : கையால் நடுதல்
பயிர் இடைவெளி : 4 x 4 அடி
களை நிர்வாகம்
30ம் நாள் ஆட்கள் மூலம் ஒரு களை வெட்டி கட்டுப்படுத்தலாம்
நீர் நிர்வாகம் : 10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும்
பூச்சி கட்டுப்பாடு
குருத்துப் புழு தாக்குதலின் அறிகுறி
புழுக்கள் முதலில் குருத்துக்களைக் குடைந்து தாக்கி கழிவுப் பொருட்களை வெளித்தள்ளிகொண்டு இருக்கும். தாக்குதல் இருந்தால் செடி காய்ந்து விடவும் வாய்ப்புண்டு. இப்புழுக்கள் காய்களைப் பிணைத்து குடைந்து சென்று விதைகளை தாக்கும்.
கட்டுப்படுத்தும் முறை
தாக்கப்பட்ட குருத்துக்களையும், காய் கொத்துக்களையும் பிடுங்கி அழிக்கவேண்டும். அல்லது
குவினல்பாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 மில்லி அல்லது குளோரிபைரிப்பாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 மில்லி தெளித்து கட்டுப்படுத்தலாம்.
அசுவிணி தாக்குதலின் அறிகுறி
இலையின் அடிப்பகுதியில் கருப்பாக கூட்டம் கூட்டமாக இருக்கும்
கட்டுப்படுத்துமமுறை
அதிகம் தாக்கப்பட்ட செடிகளை எடுத்து விட வேண்டும்
இமிடாகுளோர் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி என்ற அளவில் மாலை வேளையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
காவடிப்புழு தாக்குதலின் அறிகுறி
இலைகளை வெகுவிரைவாக தின்று அழித்துவிடும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
புழுக்களை சேகரித்து அழித்தல்.
ஒருலிட்டர் தண்ணீருக்கு குளோரிபைரிபாஸ் 4 மில்லி அல்லது குவினல்பாஸ் 4 மில்லி தெளித்து கட்டுப்படுத்தலாம்.
புரோட்டீனியா புழு தாக்குதலின் அறிகுறி
பல பயிற்களைத் தாக்கும் இப்பூச்சி விரும்பி முட்டையிடும் பயிர் ஆமணக்குதான்.
இலை,காயில் இப்புழுக்கள் கூட்டம் கூட்டமாக இருந்து இலையை தின்று சல்லடையாக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
இனக்கவர்ச்சிப் பொறிகளை ஏக்கருக்கு 5 இடத்தில் வைத்து ஆண் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். விளக்குப் பொறி 2 இடத்தில் வைத்து அந்துப்பூச்சிகளைக் கவர்ந்தழிக்கலாம். அல்லது
ஒருலிட்டர் தண்ணீருக்கு குளோரிபைரிபாஸ் 4 மில்லி அல்லது குவினல்பாஸ் 4 மில்லி தெளித்து கட்டுப்படுத்தலாம்.
தத்துப்பூச்சி தாக்குதலின் அறிகுறி
தத்துப்பூச்சி ஆமணக்கு இலை மற்றும் பயிரில் உள்ள சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும், இலைகள் சுருண்டு காணப்படும்.
கட்டுப்படுத்தும்முறை
ஒரு லிட்டர் தண்ணீருக்கு இமிடாகுளோர் 1 மில்லி என்ற அளவில் தெளித்த கட்டுப்படுத்தலாம்.
தாய் அந்துப் பூச்சியின்முட்டை அறிகுறி
இலையின் பின் பகுதியில் முட்டைக் குவியல் காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை
முட்டைக் குவியல் தென்படும் இலைகளை பரித்து தீ இட்டு அழித்துவிட வேண்டும்
அறுவடைத் தொழில் நுட்பம்
ஒரு குலையில் ஒரு காய், இரண்டுகாய் வெடித்திருந்தால் அவற்றை அறுவடை செய்து இரண்டு அல்லது மூன்று நாள் மூடிவைத்திருந்து பிறகு காயவைக்க வேண்டும். அவற்றை காய்ந்த பிறகு செங்கள,அல்லது பலகை கொண்டு தேய்த்து விதைகளை பிரித்தெடுக்கலாம். அல்லது கடலை உடைக்கும் இயந்திரம் கொண்டு விதையை பிரித்து எடுக்கலாம்.
குறிப்பு : ஒட்டுச் செடி காய் வெடிக்காது

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories