இனக்கவர்ச்சிபொறி மற்றும் நிறப்பொறி (ஒட்டும் பொறி) இவற்றின் பயன்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாமா?

இனக்கவர்ச்சிபொறி மற்றும் நிறப்பொறி (ஒட்டும் பொறி) இவற்றின் பயன்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாமா?
இனக்கவர்ச்சிபொறி என்பது பாலினத்தைச்சேர்ந்த ஆண் பூச்சிகளைக் கவர்வதாகும். ஒவ்வோர் பூச்சியும் எதிர் பாலினத்தைக் கவர்ந்து உறவு கொள்ள ஒரு விதமான வாசனையுள்ள ஹார்மோனை வெளியிடும். இந்த வாசனையை நுகர்ந்து ஆண் பூச்சிகள் தங்கள் எதிர் பாலினத்தை நோக்கி வரும் இந்த இயற்கை அடிப்படையைக் கொண்டு தான் இனக்கவர்ச்சிபொறிகள் செயல்படுகின்றன.
இவ்வாறு கவரப்படும் பூச்சிகள் பின்னர் அழிக்கப்படும். இதன் மூலம் முட்டையிடுதல் தவிர்க்கப்படுகிற்து. முட்டையிடுதல் தவிர்க்கப்படுவதால் புழுக்கள் உற்பத்தி ஆவது தவிர்க்கப்பட்டு பூச்சி மருந்தின் தேவையும் குறைகிறது. .
இனக்கவர்ச்சிபொறிகள் மூலம் எல்லா விதமான பூச்சிகளையும் கட்டுப்படுத்த இயலாது. குறிப்பிட்ட பயிர்களில் குறிப்பிட்ட பூச்சிகளை மட்டுமே கட்டுப்படுத்தவல்லது.
பயிர்களில் பூச்சித்தாக்குதல் அதிகம் இருப்பதால் பூச்சி மருந்து அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பொறிகள் வைப்பதால் பூச்சி மருந்தின் தேவை குறைகிறது.
ஒரு ஏக்கருக்கு 5 – 6 பொறிகள் வைத்தால் போதுமானது.
ஒட்டும் பொறி:
சாறு உறிஞ்சும் பூச்சிகளான தத்துப்பூச்சி வெள்ளை ஈ , கொசு, போன்றவற்றைக் கட்டுப்படுத்த இந்த ஒட்டும் பொறி பயன்படுகிறது. ஒரு தகர ஷீட்டில் மஞ்சள் பெயிண்ட் அடித்து அதன் மேல் மண்ணெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தடவி வயல்களில் வைத்தால் இந்தப் பூச்சிகள் தகர ஷீட்டில் ஒட்டிக்கொள்ளும்.
மஞ்சள் அட்டை RSGA அலுவலகத்தில் உள்ளது இதில் குறைந்தது 7000 ஆயிரம் பூச்சிகள் வரை ஒட்டும் அதன்பிறகு நாம அவற்றை அப்புறப்படுத்தலாம்
ஏக்கருக்கு 4 – 5 பொறிகள் வைத்தால் போதுமானது. இருப்பினும் பூச்சித்தாக்குதலுக்கேற்ப பொறிகளின் எண்ணிக்கை மாறலாம். எல்லா பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
நிறப்பொறிகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாது பூச்சி வரும் அறிகுறிகளை நமக்கு தெரிவித்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உதவுகிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories