இன்றைய விவசாயி பழமொழி

 

“அணில் தாவாத ஆயிரம் தென்னை மரங்களை உடையோன் 5 மன்னனுக்கு நிகரானவன் ஆவான்”

விவசாயத்தைப் பொறுத்தவரை எந்தப் பயிரை சாகுபடி செய்தாலும் பயிர்செய்யும் இடைவெளியானது மிக முக்கியமானதாகும். அந்த வகையில் இன்றைய வேளாண்மை பழமொழியில் தென்னை மரத்தின் இடைவெளி பற்றியும் இங்கு காணலாம்.

கிஷோர் ஒருமுறை அவனது தாத்தா வீட்டிற்குச் சென்று இருந்தார். அப்பொழுது தாத்தா தென்னந்தோப்பை சுற்றிப் பார்த்துக் கொண்டே இருந்தார். தென்னை மரங்களையும் பார்த்தவுடன் ஏன் தாத்தா இடைவெளிவிட்டு தென்னையை நடவு செய்து உள்ளீர்கள் என்று கேட்டார் . இதனால் இடைவெளியில் உள்ள நிலங்கள் அனைத்தும் வீணாகி போகின்றது என்றார்.

இந்த இடைவெளியில் நிலம் வீணாகாது . நமக்கு நன்மை என்று தாத்தா சிரித்தவாறு “ “அணில் தாவாத ஆயிரம் தென்னை மரங்களை உடையோன் 5 மன்னனுக்கு நிகரானவன் ஆவான்”
என்று சும்மாவா சொன்னார்கள் நமதுமுன்னோர்கள் என்றார்

உடனேயே கிஷோர் என்ன தாத்தா சொல்றீங்க இதனால் நமக்கு நன்மை தான். எனக்கு கொஞ்சம் புரியும்படி சொல்லுங்கள் என்றான்.

தென்னையை இ வ்வாறு நடவு செய்வதால் மரத்தில் ஆணில் ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மரத்திற்கு தாவும் அதை தடுக்கலாம் .ஒருவேளை அணில்கள் ஏறினால் குரும்பை, தென்னை கன்று, பாலை, தென்னங்குருத்து ஆகியவற்றை கடித்து பெரிய அளவில் பொருளாதார சேதத்தை ஏற்படுத்திவிடும் .நல்ல இடைவெளி விட்டு நடவு செய்வதால் பல்வேறு சிக்கல்களை தடுத்து , அதிக லாபம் பெற முடியும் .இது போன்ற அணில்களிடமிருந்து பாதுகாக்கும் வகையில் ஒரு தென்னை மரத்திற்கு மற்றொரு தென்னை மரத்தில் இடையில் ஒரு பெரிய தேர் செல்லும் அளவிற்கு இடைவெளி விடுவார்கள். இதனை உணர்த்துவது தான் ““அணில் தாவாத ஆயிரம் தென்னை மரங்களை உடையோன் 5 மன்னனுக்கு நிகரானவன் ஆவான்”
என்ற பழமொழி.

மேலும் நீ நினைப்பது போல மரங்களின் இடைவெளியில் உள்ள நிலங்கள் வீணாகாது. அந்த நிலத்தில் ஊடுபயிராக மிளகு ,எலுமிச்சை, கருவேப்பிலை, வாழை, சேப்பங்கிழங்கு, மிளகாய் போன்ற பல பயிர்களை பயிரிடலாம் என்றார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories