இயற்கையான தேனாக இருந்தால் அதை சிறிது கீழே விட்டாள் அந்தத் தேன் நூல் போல ஒழுகும். கலப்படத் தேன் சொட்டு சொட்டாக விழும்.
காகிதத்தில் தேனி விட்டால் அந்த காகிதத்தை உறிஞ்சினால் அது கலப்படத் தேன். உறிஞ்சாமல் அப்படியே படிந்து காணப்பட்டால் அது இயற்கையான தேனாகும்.
தேனை சூடு படுத்தினால் அதனுடைய அடர்த்தி குறையும். பிறகு குளிர வைத்தால் அதன் அடர்த்தி மீண்டும் பழைய நிலை பெறுவது இயற்கைதான் இயற்கை தேன். அடர்த்தி குறைந்து காணப்பட்டால் அது கலப்பட தேனாகும்.
வாழை சாகுபடியில் இலைகள் சேதமடையாமல் எப்படி பாதுகாக்கலாம்.
இலை வாழை சாகுபடி அதிகம் காற்று வீசாத நிலங்கள் ஏற்றவை ஆகும் .ஓரளவு காற்று வீசும் நிலங்களை தேர்வு செய்யும்போது அந்த நிலங்களை சுற்றி வரிசையாக அகத்தி,கிளரிசிடியா போன்ற மரங்களை வரப்புகளில் உயிர் வேலியாக நடவேண்டும்.
சவுக்கு ,யூகலிப்டஸ் போன்ற மரங்களை வெளி வரிசையில் நடவு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் இவை காற்றுத் தடுப்பானாக செயல்பட்டு காற்றினால் இலைகள்சேதமடையாமல் பாதுகாக்கும்.