*இயற்கை நிகழ்வு*

*இயற்கை நிகழ்வு*

நமது முன்னோர்கள் அறிவியலும் + இயற்கையாக நிகழும் நிகழ்வுகளை வைத்து மழை பெய்வதைக் கணித்தனர். அவர்களது கணிப்பு சரியாக இருந்தது. எறும்புகள், மாடுகள், பூனைகள் உள்ளிட்ட உயிரினங்களின் இயக்கங்களை வைத்தே மழை பெய்வதைக் கணித்தனர்.

எறும்புகள் நுட்பமானவை. சுறுசுறுப்பானவை. பள்ளப் பகுதியில் புற்றுக் கட்டியிருந்தால் திடீரென்று அங்கிருந்து மேட்டுப் பகுதியினை நோக்கித் தங்களது முட்டைகளை எடுத்துக் கொண்டு வரிசையாகச் சென்று நீர் புகாத இடத்தில் தங்களது இருப்பிடத்தை மாற்றிக் கொள்ளும். பள்ளமான பகுதியில் இருந்து மேட்டுப் பாங்கான பகுதிக்கு எறும்புகள் முட்டைகளைக் கொண்டு சென்றால் உடன் ஓரிரு நாட்களில் மழை பெய்யப் போகிறது என்று மக்கள் அறிந்து கொண்டனர். இவ்வாறு தாங்கள் அனுபவத்தால் கண்டுணர்ந்த உண்மையைப் பிறரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில்,

_*‘‘எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை பெய்யும்’’*_

என்ற பழமொழியில் புகுத்திக் கூறினர்.

இயற்கை நிகழ்வை உன்னிப்பாக நன்கு கவனித்தால் மட்டுமே மழை பெய்யப் போகும் அறிகுறிகளை உணர முடியும். ஆதனால் மனிதன் இயற்கையைத் தெளிவுற உணர்ந்து வாழ வேண்டும். எனது பண்ணையில் கடந்த 50 நாட்களாக நான் கவனித்த உண்மை எறும்புகளின் அறியும் திறன் மற்றும் சமயோசித செயல்பாடு என்னை வியப்பில் ஆற்றியது.

ஆதாரம் எனது பண்ணையில் அதிக மழை மழை பெய்து வருகிறது அதன் காரணமாக எரும்பு மேடான பகுதியில் சுமார் ஒரு அடி உயரத்திற்கு தனது புற்று அமைத்துள்ளது …

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories