இயற்கை பூச்சிக்கொல்லியான பெவேரியா பேசியானா !!

இயற்கை பூச்சிக்கொல்லியான பெவேரியா பேசியானா !!
🍃 ரசாயன பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டால் விளைநிலங்கள், விளைப்பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழல் என அனைத்தும் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.
🍃 இந்த நிலையில் பூச்சிகளை கட்டுப்படுத்த இயற்கையான பூச்சிக்கொல்லி மருந்துகளை உபயோகிப்பதே நல்லது. அதை தொடர்ந்து பெவேரியா பேசியானா என்ற இயற்கை பூச்சிக்கொல்லியை பற்றி இங்கு காண்போம்.
பயன்கள் :
🌿 பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளுக்கு நோய்களை ஏற்படுத்தி அந்த பூச்சிகளை அழிக்கும் திறன் இந்த பூச்சிக்கொல்லிக்கு உண்டு.
🌿 பூச்சிகளை அழிப்பதில் முக்கியமானதாக இது விளங்குகிறது.
பயன்படுத்தும் அளவு :
🌿 பெவேரியா பேசியானாவை 10 கிராம் என்ற அளவில், ஒரு லிட்டர் தண்ணீருக்கு கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம்.
கட்டுப்படுத்தும் பூச்சிகள் :
🌱 பெவேரியா பேசியானா என்ற இயற்கை பூச்சிக்கொல்லியானது நெல்லை தாக்கும் இலை சுருட்டுப்புழு, இலைப் பிணைக்கும் புழு, கொம்புப் புழு, கூண்டுப்புழு, குட்டை கொம்பு வெட்டுக்கிளி, முள் வண்டு, புகையான் மற்றும் பச்சைத் தத்துப்பூச்சி ஆகிய பல பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
🌱 மேலும் தக்காளியில் பழத்துளைப்பான் போன்ற பூச்சிகளை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது.
🌱 மணிலா, பருத்தி வகைகள், சூரியகாந்தி, பச்சை மிளகாய், கனகாம்பரம் போன்ற செடிகளைத் தாக்கும் அனைத்து பூச்சிகளையும் கட்டுப்படுத்தலாம்.
🌱 கேந்தி மலரைத் தாக்கும் பச்சைப் புழு மற்றும் புரடீனியா புழு ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும்.
🌱 மேலும் பருத்தியில் உள்ள காய்ப்புழுக்கள் மற்றும் வெள்ளை வண்டு, கரும்பு தண்டுத் துளைப்பான்கள், தென்னை காண்டாமிருக வண்டு மற்றும் கூன்வண்டு போன்றவற்றையும் இந்த பெவேரியா பேசியானா என்ற இயற்கை பூச்சிக்கொல்லி கட்டுப்படுத்தும்.
🌱 இதை கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், பீன்ஸ், அவரை போன்ற பயிர்களில் தோன்றும் காய்த்துளைப்பானைக் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தலாம்.
🌱 மேலும் மாமரத்தில் தோன்றும் இலை மற்றும் பூ பிணைக்கும் புழுக்கள், தேக்கு மரத்துளைப்பான், வாழையில் கூன்வண்டு போன்ற பூச்சிகளையும் கட்டுப்படுத்தப் பயன்படும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories