*இயற்கை முறையில் எலிக்கட்டுப்பாடு*

*இயற்கை முறையில் எலிக்கட்டுப்பாடு*

🐁 உணவு தானிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை எலிகள் சாப்பிட்டுச் சேதப்படுத்துகின்றன.

விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும் எலிகளைக் கட்டுப்படுத்தும் முறையை பற்றி இங்கு காண்போம்…

🐁 நெல் விவசாயிகளுக்கு ஒரு மிகப் பெரும் எதிரியாக இருப்பது வயல் எலிகளே.

〽️ சராசரியாக 20 சதவீதம் விளைச்சலை எலிகள் தின்பதாகப் பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

🐁 ஒரு எலியானது பிறந்த 30 முதல் 35 நாட்களில் சினை பிடித்து அடுத்த 30 நாட்களில் 7 முதல் 12 வரை குட்டிகளை ஈனும் திறனுடையது.

1 எலி ஒரு ஆண்டில் 200 முதல் 300 வரையில் இனப் பெருக்கம் செய்யும். எனவே எலிகளைக் கட்டுப்படுத்துவதை மிகவும் முக்கியமான சவாலாக விவசாயிகள் பார்க்க வேண்டியிருக்கும்.

🐁 எலிகள் உணவின்றி 7 நாட்களும், தண்ணீர் இன்றி 2 நாட்களும் வாழும்.

〽️ எலிகளுக்கு கேட்கும் திறனும், மோப்ப சக்தியும் அதிகம்.

🐁 எலிகள் உணவுக்காக தன் இருப்பிடத்திலிருந்து 15 மீட்டர் தூரம் வரை செல்லும்.

எலிகள் 20 மடங்கு அதன் கழிவுகளினால் உணவுகளை சேதப்படுத்துகிறது.

🐁 எலிகளினால் மனிதனுக்கு 35 வகையான நோய்கள் பரவுகின்றன.

எலியை கட்டுப்படுத்துவது பற்றி

நொச்சி மற்றும் எருக்கலை செடியை வயல் சுற்றி வேலிப்பயிராக நட்டால், எலித் தொல்லை இருக்காது.

〽️ தங்கரளி கிளைகளை வயலை சுற்றி போட்டால் எலி தொல்லை அதிகம் இருக்காது.

🐀 நெல் வயலில் எலியைக் கட்டுப்படுத்த சணப்பு பூவை சிறிய துண்டுகளாக்கி, அதைப் பரவலாக அங்காங்கே வயலில் இட்டால், அதிலிருந்து கிளம்பும் வாடையினால் எலிகள் ஓடி விடும்.

எலி வலைக்கு அருகில் ஆந்தை உட்கார குச்சி வைத்தால் அது எலித் தொல்லையை குறைக்க உதவும்.

🐀 எலி எண்ணிக்கையை குறைக்க ஒவ்வொரு பயிர் அறுவடைக்குப் பின்பும், எலி வலைத்தோண்டி எலிகளை அழிக்க வேண்டும்.

〽️ ஊறவைத்த அரிசியை எலி கவரும் பொறியாக வைத்தால், நிறைய எலிகளைக் கவரும்.

🐀 பசும் சாணத்தை வயலிலும், வரப்பிலும் வைத்தால், எலித்தொல்லைக் குறையும்.

🐀 கருவாட்டை தணலில் இட்டு சுட்டு பின் பொடித்து, அதனுடன் சமஅளவில் சிமெண்ட் கலக்கவும்.

〽️ இக்கலவையை எலி நடமாட்ட பகுதிகளில் சிறு சிறு குவியலாக வைக்க வேண்டும். எலிகள் கருவாட்டு வாடையால் ஈர்க்கப்பட்டு இக்கலவையை உண்டு மடியும்.

🐀 தொடர்ச்சியாக பாசனத்தில் ஜீவாமிர்தம் மற்றும் மீன்அமிலம் கலந்து விடும்போது, எலிகளின் நடமாட்டம் அறவே இல்லாமல் போகின்றது.

மற்றொரு முறையில் பப்பாளி காய்களை துண்டுத்துண்டாக வெட்டி மாலைவேளையில் வரப்புகளில் போட்டுவிட்டால் எலிகள் பப்பாளித் துண்டுகளை தின்றுவிடும்.

👉 அதன்பின் அதில் இருக்கும் பிசின் போன்ற திரவம் எலியின் வாய்களில் ஒட்டிவிடுவதால் எலிகள் பசியில் இறந்து விடும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories