இயற்கை முறையில் எள் சாகுபடி செய்ய வேண்டுமா? இதை வாசிங்க…

எள் என்னை வித்துக்களில் முக்கிய ஒன்றாகும். எள்ளானது எண்ணெய் வித்துப் பயிர்களின் அரசி என்றழைக்கப்படுகிறது.

இது தொடர் பயிருக்கும், கலப்பு பயிருக்கும் மற்றும் தனிப்பயிருக்கும் ஏற்றதாகும். எள்ளானது நிலத்தடியில் எஞ்சியுள்ள ஈரத்தன்மையை பயன்படுத்தி வறட்சியினைத் தாங்கி வளரக் கூடிய தன்மையுடையதாகும்.

நாம் அன்றாடம் உணவுகளில் பயன்படுத்தும் நல்லெண்ணெய் எள்ளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. எள் மிட்டாய் தயாரிக்கவும் பயன்படுத்தபடுகிறது.

தமிழில் ஒரு பழமொழி உண்டு “இளைத்தவனுக்கு எள்” என்று, சந்தையில் எப்பொழுதும் அதிக விலை கிடைக்கும் பொருட்களில் எள்ளும் ஒன்று.

எள் பயிரிடுவதர்கு தகுந்த பட்டங்கள் தை மற்றும் சித்திரை. மானாவாரியில் ஆடி படத்திலும் பயிரிட படுகிறது.

எள் மற்ற பயிர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. ஒரு மற்றும் இரு விதியை தாவரங்களுக்கு வேறு வேறு வித சத்துக்கள் தேவைப்படும். ஆனால் எள்ளிற்கு அணைத்து வகையான சத்துக்களும் தேவைப்படுகின்றது.

எள் அறுவடை செய்த பிறகு மண்ணில் எந்தவித சத்துக்களும் இருக்காது, எள் அணைத்து சத்துக்களையும் உறிஞ்சிவிடும்.

திண்டிவனம் என்னை வித்து ரகம் மிகவும் பிரபலமான ரகம். எள்ளின் வயது 70 லிருந்து 75 நாட்கள்.

ஏக்கருக்கு 10 டன் தொழுவுரம் உழவுக்கு முன்பு இட வேண்டும். நிலம் ஈரமாக இருக்கும்பொழுது இந்த தொழுவுரத்தை இடவும். தொழுஉரத்துடன் உயிர் உரங்களான அசோஸ்பயிரில்லம், பாஸ்போபாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா VAM ஆகியவற்றை கலந்து இட வேண்டும்.

நன்றாக உழவு ஓட்டவும். ஒரு ஏக்கருக்கு 2.5 – 3 கிலோ விதை விதைக்கலாம். எள்ளிற்கு விதை நேர்த்தி தேவைப்படாது. விதை நேர்த்தி தேவைப்படாது. விதை நேர்த்தி தேவைப்பட்டால் – 3 கிலோ எள் க்கு 1/2 கிலோ கிளிஞ்சல் சுண்ணாம்பு தூள் கலந்து விதைக்கலாம்.

இரண்டு சால் உளவு ஓட்டிவிட்டு எள் விதைக்கவும். விதைத்தபிறகு மேலோட்டமாக ஒரு உளவு மண் மூடும்படி செய்ய வேண்டும். விதைத்த 7 முதல் 8 வது நாள் முளைக்க தொடங்கும்.

எள் முளைத்த 15 வது நாளுக்கு மேல் முதல் களை வெட்டலாம். ஒரு களை மட்டுமே போதுமானது இரண்டாவது கலை தேவைப்படாது.

முதல் களை வெட்டிய பிறகு முதல் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். கண்டிப்பாக எள்ளிற்கு தண்ணீர் தேங்கக்கூடாது. முதல் தண்ணீருடன் அமிர்த கரைசல் கலந்து கொடுத்தால் போதுமானதாகும்.

கற்பூர கரைசலை 10 நாள் இடைவெளியில் தொடர்ந்து கொடுப்பதால் செடிகளில் அபரிமிதமான வளர்ச்சி இருக்கும். நிறைய பூக்கள் மற்றும் காய்கள் தோன்ற கற்பூர கரைசல் உறுதுணையாக இருக்கும். இதனால் ஒரு கை பிடியில் 6 காய்கள் வரை இருக்கும். அவ்வாறு இருந்தால் 1 ஏக்கருக்கு 5 முதல் 6 மூட்டைகள் வரை மகசூல் கிடைக்கும்.

முக்கால் அடிக்கு ஒரு செடி இருந்தால் போதுமானது. முதல் கலை எடுக்கும்போது தேவையற்ற அடர்த்தியை களைத்து விடவும்.

எள்ளை தாக்கும் நோய்கள். வாடல் நோய், வேர் அழுகல். தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதால் வேர் அழுகளில் இருந்து காப்பாற்றலாம். பூக்கள் பூக்கும்பொழுது மீன் அமிலமும், தேங்காய் பால் கரைசல் கலந்து கொடுப்பதால் பூக்கள் உதிர்வதை முற்றிலும் தடுக்கலாம்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories