இயற்கை முறையில் களைகளை கட்டுப்படுத்த வேண்டுமா?

இயற்கை முறையில் களைகளை கட்டுப்படுத்த வேண்டுமா?

எண்ணெய்வித்து பயிர்களில் உற்பத்தியை அதிகரிக்கும் வழிமுறை !!

🌿 நிலக்கடலையில் கோ-6, தரணி, கே-6, கே-9, வி.ஆர்.ஐ-6,7,8, ஐ.சி.ஜி.வி-350 மற்றும் டி.எம்.வி 13 ஆகிய ரகங்களும், எள்ளில் டி.எம்.வி 7, எஸ்.வி.பி.ஆர் 1, வி.ஆர்.ஐ-1,2 ஆகிய ரகங்களும், சூரியகாந்தியில் டி.என்.ஏ.யு, எஸ்.எப்.எச்.ஒய் 2, கோ-5 ஆகிய ரகங்களும் உள்ளன.

🌿 ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராமும், ஒரு ஹெக்டேர் விதைக்கு ரைசோபியம் 600 கிராமும் கலந்து, விதை நேர்த்தி செய்து 30 நிமிடம் நிழலில் உலர வைக்க வேண்டும்.

🌿 விதைக்கும் போது ஒரு மீட்டருக்கு 33 பயிர்கள் இருக்கும்படி பராமரிப்பு செய்ய வேண்டும்.

🌿 மண் பரிசோதனை அடிப்படையில் உரமிட வேண்டும்.

🌿 ஒரு ஹெக்டேருக்கு தழைச்சத்து 25 கிலோவும், மணிச்சத்து 50 கிலோவும், சாம்பல் சத்து 75 கிலோவும் இட வேண்டும்.

🌿 தழைச்சத்து மற்றும் மணிச்சத்தை 3 பிரிவுகளாக பிரித்து அடியுரமாக 50 சதவீதமும், விதைத்த 20-வது நாளில் 25 சதவீதமும் மற்றும் விதைத்த 45-வது நாளில் 25 சதவீதமும் அளிக்க வேண்டும்.
மூடாக்கின் சிறப்புகள் !!

🌱 மழைக்காலத்தில் நீரை சேமிக்கும்.

🌱 மூடாக்கே சிறிது நாளில் மக்கி மண்ணிற்கு உரமாக பயன்படுகிறது.

🌱 இதனால் நன்மை செய்யும் மண்புழு, கரையான் மற்றும் நுண்ணுயிரிகள் பெருக்கமடைகின்றன.

🌱 மேலும் வெயில் காலத்தில் நீர் ஆவியாவதை தடுக்கும். களைகள் உருவாவதில்லை.

🌱 மண்ணை கோதிவிடுதல், பார் அமைத்தல் போன்ற வேலைப்பாடுகளை தவிர்க்க முடியும்.
களைகளை கட்டுப்படுத்த,,,,,

🍃 களையை கட்டுப்படுத்த மாடுகளின் சிறுநீரே போதுமானது.

🍃 களை சிறியதாக இருக்கும்போது ஸ்பிரேயர் கொண்டு பயிர்களின் மீது படாமல் களைகள் மீது தெளிக்கலாம். தெளிக்கும் மாட்டுக்கோமியத்தில் தண்ணீர் சிறிதளவு கூட கலக்கக்கூடாது.

🍃 தேவைப்பட்டால் எலுமிச்சை சாறு ஒரு டேங்கிற்கு அரை பழச்சாறு சேர்த்துக்கொள்ளலாம்.

🍃 ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை கூட தெளிக்கலாம்.

🍃 மேலும் இது பயிர்களுக்கு ஊட்டமேற்றிய உரமாகி, மண்ணில் நுண்ணுயிரிகளை பெருக்க செய்யும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories