இயற்கை வழி விவசாயத்திற்கு ஏற்ற சாணப்பால் தயாரிப்பது எப்படி ? எங்கெல்லாம் பயன்படுத்தலாம் ? சாணப்பாலைக் காட்டிலும் சிறப்பானது எதுவும் உண்டா?

 

 

இயற்கை வழி விவசாயத்திற்கு ஏற்ற
சாணப்பால் தயாரிப்பது எப்படி ? எங்கெல்லாம் பயன்படுத்தலாம் ? சாணப்பாலைக் காட்டிலும் சிறப்பானது எதுவும் உண்டா?

சாணப்பால் தயாரிப்பது :

மதியம் 3 மணிக்கு 200 லிட்டர் கொள்ளளவு உடைய சிமென்ட் தொட்டி அல்லது ஒரு பிளாஸ்டிக் பேரலில் 200 லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் 40 கிலோ (அன்றைய புதிய) நாட்டு பசுமாட்டு சாணம் நன்றாக கரைத்து பல முறை நன்கு கலக்கி விடவும். சரியாக 24 மணி நேரம் கழித்து மறுநாள் 3 மணிக்கு பேரலில் உள்ள சாணக் கரைசலை ஆட்டாமல், கலங்கிவிடாமல் மொண்டு வெளியெடுக்கவும்.
.
இந்த 200 லிட்டர் சாணக்கரைசலை ஒரு ஏக்கர் நெற்பயிர் மீது மாலை 4 மணிக்கு மேல் தலை சத்து வளர்ச்சி ஊக்கியாக தெளிக்கலாம். தெளித்த 48 மணி நேரத்தில் நெற்பயிரானது கரும் பச்சை நிறத்தில் (luxurious green colour) காணப்படும். . மேலும், இது இலைப்புள்ளி நோய், இலைக் கருகல் போன்றவற்றிற்கு சிறந்த தீர்வு.

ஈர விதை நேர்த்திக்கு ஏற்றது.
அனைத்து விதைகளையும் இதில் நேர்த்தி செய்யலாம். ஆனால், விதைகளின் கடினத் தன்மையைப் பொருத்து அதன் நேர்த்தி நேரம் மாறுபடும்.
14 நாட்களுக்கு ஒருமுறை பயிர் மீது தெளித்து வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சி மற்றும் நோய் பாதுகாப்பானாக பயன்படுத்தலாம்.

சாணப்பாலுக்கு மாற்றக சாண எரிவாயு கழிவு (Gober Gas Slurry) ஒரு சிறந்த இயற்கை எரு மற்றும் மகசூல் கூட்டி :

சாண எரிவாயு கழிவில் மண்ணிற்குத் தேவையான தழை, மணி, சாம்பல் சத்துக்களும் அடங்கியுள்ளது. இதனை பயன்படுத்தும் பொழுது மண் பல்மடங்கு வளப்படுத்தப்படுகிறது.

1 ) நெல் விதையினை இதில் 18 மணி நேரம் ஊரவைத்து முளைகட்டி விதைப்பதன் மூலம் விதையின் முனைப்புத்திறன் அதிகரிப்பதுடன் நாற்றங்காளில் நாற்றானதுவேகமாக வளர்ந்து திடமான கரும் பச்சை நிறத்தில் காணப்படும்.

2) நாற்று பறிப்பதற்கு இலகுவாக இருக்கும்.

3) நடவு வயலில் இதை இடுவதன் மூலம் மண் வளமாவது மட்டுமின்றி களை இருக்காது.

வயலில் அதிக தூர்களுடன் கரும்பச்சையாக இருப்பதுடன் தூர்களில் தோன்றும் கதிர்களில் மணிகள் முழுப்பாக ஊட்டமாக காணப்படும். அறுவடையில் ஒரு மூட்டைக்கு 10 கிலோ எடை மற்றும் வைக்கோல் 2 தெரை கூடுதலாகவும் கொடுக்கும்.

சாண எரிவாயு கழிவை எருவாக பயன்படுத்தி தரமான விளைச்சளை இயற்கை வழிமூலம் பெற முடியும்.

விவசாயிகளின் கவனத்திற்கு :

சாண எரிவாயு கழிவு எரு ( COBER GAS SLURRY ) தொடர்ந்து வயலில் இடுவதால் மண்வளம் பெருகி மண்ணில் மணிச்சத்து அதிகரித்து கருக்கா, பதர் எதுவுமின்றி திரட்சியான மணிகளுடன் மகசூல் அதிகரிக்கிறது. இதனை ஒவ்வொரு விவசாயியும் குறைந்தது 10 சென்ட் நிலத்திலாவது செய்து பார்த்து அனுபவம் பெறவேண்டும் என்பது எனது தனிப்பட்ட வேண்டுகோள்.

கோ.மோகன்ராஜ் யாதவ்

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories