இயற்கை வேளாண்மையில் பூச்சிகளை கட்டுப்படுத்த சில வழிமுறைகள்

இயற்கை வேளாண்மையில் பூச்சிகளை கட்டுப்படுத்த சில வழிமுறைகள்
விவசாயம் செய்யக்கூடிய நிலத்தில் விதை நடவு செய்ய அல்லது நாற்று நடவு செய்வதற்கு முன்பாக பயிர் சுழற்சி முறையை கையாள்வது மிகமிக முக்கியம்.
நமது நிலத்தினுடைய மண்ணின் வளம் அதிகரிக்கும் பயிர்கள் செழித்து வளரும் பூச்சிதாக்குதல் குறைவாக தென்படும் பயிர்களை மாற்றி மாற்றி செய்தல் அதாவது நெல் சாகுபடி செய்த வயலில் உளுந்து சாகுபடி செய்யலாம் எந்த காய்கறி பயிர்கள் சாகுபடி செய்தாலும் அடுத்து ஒரு பயறுவகை பயிர்கள் சாகுபடி செய்ய வேண்டும் இதேபோல ஒவ்வொரு பயிர் சாகுபடிக்கு பின்பு பயர்வகைப்பயறு சாகுபடி செய்யலாம் அப்படி சாகுபடி செய்வதால் அந்த பருவத்தில் தாக்கிய பூச்சிகள் அடுத்த பயிரில் தாக்க வாய்ப்பில்லை.
ஊடுபயிர்
நமது முன்னோர்கள் விவசாயம் செய்யும் பொழுது ஒரு பயிரை மட்டும் சாகுபடி செய்யாமல் பல பயிர்களை நடவு செய்வார்கள் அதாவது ஒரு வயலில் காய்கறி பயிர்கள் அடுத்த வயலில் மலர்கள் அடுத்து கொடிவகை, பணப்பயிர் சாகுபடி இப்படி மாற்றி மாற்றி சாகுபடி செய்தால் ஒரு பயிருக்கு மார்க்கெட்டில் நல்ல விலை கிடைக்கும் அடுத்த பயிருக்கு குறைவாக கூட விலை கிடைக்கலாம் எல்லாமே குறைந்த விலை கிடைத்தால் அது விவசாயிகளுக்கு இளப்பாக இருக்கும்.
அவற்றை மாற்றி அமைப்பதால் அதில் வரும் இளப்பை அடுத்த பயிரில் ஈடுகட்டமுடியும் எனவே விவசாயம் செய்வது தொடர்ந்து ஓரேபயிரை சாகுபடி செய்யமல் மாற்றி அமைக்கலாம்.
அடுத்து மார்க்கெட் நிலவரம் தெரிந்து அல்லது காய்கறி பயிர்கள் எவ்வளவு பேர் நடவு செய்துள்ளார்கள் என்று விதை விற்பனை நிறுவனம், அல்லது கடைகளில் தெரிந்து கொண்டு குறைவாக விற்பனை செய்துள்ள பயிர்களை தேர்வு செய்து சாகுபடி செய்வதால் அதிக விலை கிடைக்க வாய்ப்புள்ளது.
பொறிப்பயிர்
நாம நாற்று அல்லது விதை நடவு செய்யும் பொழுது பொதுவாக தக்காளி நடவு செய்தால் 5 வரிசைக்கு ஒரு வரிசை தட்டப்பயிரை வரிசைப் பயிராகவும் மக்காச்சோளம்இ ஆமணக்கு வரப்பு பயிராகவும் இப்படி சாகுபடி செய்தால் பூச்சிகளுக்கு முதலில் வரப்பு பயிரையோ அல்லது வரிசைப்பிரையோ அவை விரும்பி உண்பதால் குறிப்பிட்ட பயிர் நமக்கு சேதாரம் ஏற்படாது .
பல பயிர்களில் வரும் பூக்களுடைய வாசனை பூச்சிகளுக்கு ஒரு வித ஒவ்வாத மனத்தை ஏற்படுத்தும் அதனால் அவை நம்முடைய வயலுக்கு வராது இவை பூச்சியை விரட்ட சிறிய தொழில்நுட்பம் தான்
கவர்ச்சிப் பயிர்
ஒவ்வொரு வகை பூச்சிகளுக்கு பிடித்த பயிர் என்று ஒன்று உண்டு குறிப்பாக தத்துப்பூச்சிஇ அசுவினிக்கு தட்டப்பயறு மிகவும் பிடிக்கும் அதேபோல புரோட்டீனியா புழுவிற்கு ஆமணக்கு மிகவும் பிடிக்கு பச்சைக் காய்புழுவிற்கு செண்டு மல்லியும் வெள்ளை ஈக்கு வெண்டை செடியும் மிகவும் பிடிக்கும் இதுபோல நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே கவர்ச்சிப்பயிரைப் பற்றி தெரிந்து கொண்டு கடலை சாகுபடி செய்தால் தட்டப்பயறு துவரைஇ மக்காச்சோளம் என்று போட்டு பூச்சிகளை கட்டுப்படுத்தி வந்தனர்.
நாமும் அதேபோல குறிப்பிட்ட பயிர்களை சாகுபடி செய்து பூச்சிகளின் தாக்கத்தை குறைக்கலாம்
இவை மட்டும்மல்லாது ஒரு சில பூச்சிகளுக்கு எதிர்ப்புத்திறன் கொண்ட விதை ரகங்களும் உள்ளது அவற்றை வேளாண் அலுவலர்களின் ஆலோசனையின் மூலம் நடவு செய்து பூச்சிகளை குறைத்து அதிக மகசூல் பெற முன்கூட்டியே திட்டமிடுவோம்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories