#இ.எம் கரைசலின் பயன்கள்

#இ.எம் கரைசலின் பயன்கள்
விவசாயம், நீர் நிலை பாதுகாப்பு, சுகாதாரம், முதலியவற்றில் இ.எம் கரைசல் அதிகம் பயன்படும்
இ.எம் கரைசலில் அதிகமான நுண்ணுயிர்கள் இருப்பதால் மண்வளம் பாதுகாக்கப்படும்
நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் அதிகரிக்கும்.
மண்ணில் உள்ள குப்பைகள் விரைவாக மக்கச் செய்யும்.
வேர் வளர்ச்சி அதிகரிக்கும்
பயிர் செழித்து வளரும்
மண்ணில் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
சத்துக்களை சிதைத்து பயிர்கள் சுலபமாக எடுத்துக்கொள்ள வழி வகை செய்கிறது
சுற்று சூழல் மாசு படுத்தாது
தொற்று நோய் தடுக்கப்படும்
துர்நாற்றம் ஏற்படுத்தும் கிருமிகள் அழிக்கப்படும்.
இவற்றை விவசாயம், கோழிப்பண்ணை, மருத்துவம், கழிவறை மற்றும் பொது இடங்களுக்கும் பயன்படுத்தலாம்.
சாக்கடை நீரில் தெளிப்பதன் மூலம் கொசுத்தொல்லை குறையும்
இ.எம் கரைசல் ஒரு லிட்டர் தாய் ஈயம் வாங்கி வந்து அதிலிருந்து 20 லிட்டர் ஈயம் கரைசல் தயாரிக்கலாம்
இ.எம். தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்
ஒரு லிட்டர் இ.எம்
ஒரு கிலோ மண்டவெல்லம்
18 லிட்டர் தண்ணீர்
20 லிட்டர் கொள்ளளவு உள்ள கேன்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு கிலோ மண்ட வெல்லத்தை நன்றாக பொடிசெய்து அதில் 18 லிட்டர் தண்ணீரை
ஒரு லிட்டர் இ.எம் கரைசலையும் ஊற்றி கலந்த பிறகு 20 லிட்டர் கேனில் ஊற்றி மூடிவிடவும்
தினமும் இவற்றை ஒரு முறை திறந்து திறந்து மூடிவும் இவ்வாறு ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம்.
இவை நன்றாக நொதித்து புளிப்பு வாடை வரும் அவற்றை 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி இ.எம் என்ற விகிதத்தில் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம் அல்லது தண்ணீர் பாயும் நேரத்தில் ஊற்றி விடலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories