உங்கள் கொய்யாப்பழத்தில் புழுக்கள் வர காரணம் பழ ஈக்கள் பாதிப்பு அதிகமாக உள்ளது.
பழ ஈக்கள்:
🍊மழைக் காலங்களில் கொய்யாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
🍊கொய்யா பழங்கள் நிறம் மாறும் தருணத்தில் பழ ஈக்கள் பழங்களின் மேல்புறத்தில் முட்டையிடும்
முட்டையிலிருந்து புழுக்கள் வெளிவந்ததும் பழங்களை துளைத்து புழுக்கள் உள்ளே சென்று மென்மையான சைதைப்பகுதியை சாப்பிடும்.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள் :
🍊பழ ஈ தாக்குதலுக்கு வாய்ப்புள்ள இடங்களில் மழைக்காலத்தில் கொய்யா மரத்தின் மீது அதிக கவனம் தேவை . அதேபோல் அனைத்து பழங்களையும் அறுவடை செய்யவும்.
🍊கீழே விழுந்த பழங்களை அப்புறப்படுத்தி 2 அடி ஆழத்தில் புதைக்கவும்.
🍊அறுவைக்குப் பின்னர் கோடை உழவு செய்வதால் புழுக்கள் மற்றும் கூட்டுப் புழுக்கள் 4-6 செ.மீ. ஆழத்தில் புதைக்கப்படுகிறது.
🍊 புதியதாக போட்ட நாட்டு பசு மாட்டு சாணத்திலிருந்து வடித்தெடுத்த சாணிப்பால் லிட்டர் தண்ணீருக்கு 30ML என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம்.
🍊 வெர்டிசிலியம் லெக்கானி [Verticillum Lecani] லிட்டர் தண்ணீருக்கு 5 ML என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம் .
🍊பழ ஈக்கலுக்கான பொறி ஏக்கருக்கு 5 என்ற எண்ணிக்கையில் வைக்கலாம். அல்லது கருவாட்டுப் பொறி 5 எண்ணிக்கையில் வைக்கலாம் .
இவைகளை முறையாக செய்தால் பழ ஈக்களின் தொல்லையை முழுமையாக தவிர்க்கலாம் …