உயிர் வேலிகளின் சிறப்புகள்

நிலத்தை பாதுகாப்பதில் உயிர்வேலி களின் பங்கு அதிகம். முன்பெல்லாம் தானாகவே வளர்ந்து உயிர் வேலி செடிகள் காணப்படும். இப்போது நிலத்தைச் சுற்றி சிமெண்ட் சுவர்களை அமைக்கின்றனர். அவற்றைவிட உயிர்வேலி நன்மைகள் அளிப்பவை அதைப் பற்றி இங்கு காணலாம்.

உயிர் வேலி என்பது கால்நடைகளுக்கு மட்டுமல்ல உயிர் வேலி அமைக்கும் பகுதியில் உள்ள மரங்கள் நிலத்திற்குள் வரும் காற்றை தடுக்கும் தடுப்பானாகவும், மேலும் உயிர் வேலிகளுக்கு மண்ணரிப்பு காற்று அரிப்பை தடுக்கும் சக்தி உண்டு உயிர் வேலி நிலத்தில் நாம் பயிரிடும் பழ மரங்கள், தென்னை,வாழை போன்றவைகளை கீழே சாய விடாமல் காற்றின் வேகத்தை குறைக்கும் தடுப்பானாக பயன்படுகிறது. மண்மேடு உருவாவது தடுக்கப்படுகிறது

பரம்பரைமுள் , கிலுவை முள்ளு ,கள்ளிச்செடி ,பனைமரம்,நொச்சி, கொடி பூவரசு, கொடுக்காய்ப்புளி, இளந்தை, சவுக்கு ,காகிதப்பூ ,கலாக்காய் போன்ற மரங்களை உயிர் வேலியாக அமைக்கலாம்.

உயிர் வேலி நிலத்தை சுற்றி அமைக்கும் போதும் பாம்பு, தேள், பூரான் போன்ற உயிரினங்கள் அனைத்தும் நிலத்துக்குள் தங்காமல் வேலியில் தங்கி பாதுகாப்பு வளையமாக செயல்படும். இதனால் நிழல் உருவாகும். ஆந்தை, மயில்கள், குருவி கரிச்சான் போன்ற பறவையினங்கள் உயிர் வேலிகளில் கூடுகட்டி தங்கி சிறு சரணாலயமாக செயல்பட வழிவகுக்கும். மழை காலத்திற்கு முன்பு நிலத்தின் எல்லை பகுதிகள் முழுவதும் சிறிது இடம் ஒதுக்கி ( ஆறு முதல் ஏழு அடி உயிர் வேலி அமைத்தால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு பயிர்களுக்கு பாதுகாப்பான அரணாக அமைந்துவிடுகிறது.

எனவே ஆண்டிற்கு ஒரு முறை கவாத்து செய்து புதர் போல இல்லாமல் வைத்துக்கொள்ள வேண்டும். சிலவகை உயிர் வேலிகள் விவசாயத்திற்கு கூடுதல் வருமானம் தரக்கூடிய வகையில் தேனீ வளர்ப்புக்கு வழிவகுக்கும். உயிர்வேலி பயிர்களில் சில கால்நடைகளுக்குத் தீவனமாகவும் பயன்படுகின்றன.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories